ETV Bharat / state

'ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை கறிவேப்பிலை போல பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதா'? - முன்னாள் டிஎஸ்பி பளிச் - adsp velladurai suspension - ADSP VELLADURAI SUSPENSION

adsp velladurai issue: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஏடிஎஸ்பி வெள்ளத்துரைக்கு உடனடியாக பணி ஒய்வு வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று முன்னாள் டிஎஸ்பி மாணிக்கவாசகம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

வெள்ளத்துரை, வாணிக்கவாசகம்
வெள்ளத்துரை, வாணிக்கவாசகம்(கோப்புப்படம்) (Credits - Ex DSP Manickavasagam FB)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 2:14 PM IST

சென்னை: தமிழக காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்ட ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்றுடன் (மே 31) பணி ஒய்வு பெற வேண்டிய சூழலில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த வெள்ளத்துரை தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றப் பதிவுப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியில் இருந்து ஒய்வு பெறும் சமயத்தில் அவரை சஸ்பெண்ட் செய்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் அதிகாரிகள் அவரை கறிவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்டு, ஓய்வு பெரும் நாளில் அவரை தூக்கி எறிவது, சிறந்த தலைமைக்கு உரிய பண்புகள் அல்ல'' என்றும் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மாணிக்கவாசகம் கூறியுள்ளார்.

முன்னாள் டிஎஸ்பி மாணிக்கவாசகம் தமது முகநூல் பதிவில் கூறியிருப்பது; இன்று (31.05.2024) பணி நிறைவு பெற்று ஓய்வு பெற இருந்த நிலையில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கும் செயல் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

எவ்வளவு கடுமையான பணிகளை அளித்தாலும், அவற்றை சாக்குப் போக்குச் சொல்லி தட்டிக் கழிக்காமல், அசாத்திய துணிச்சலுடன் எதிர்கொண்டு தன் கடமையை செவ்வனே செய்தவர் வெள்ளத்துரை என்பது தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமல்ல. பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்.

இப்படி பொதுமக்களிடையே நல்ல இமேஜ் கொண்ட ஒரு காவல் அதிகாரியை ஏதோ ஒரு Technical Reason-ஐக் காரணம் காட்டி ஓய்வு பெறும் நாளன்று சஸ்பெண்ட் செய்யும் செயல், திறம்பட பணியாற்ற நினைக்கும் மற்ற இளம் காவல் அதிகாரிகள் மனதில் கோழைத் தனத்தை உருவாக்கி விடுவதுடன், தமிழக அரசுக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் மிகப் பெரும் கெட்ட பெயரையும் ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.

“Charges pending அதனால் Technical Grounds காரணமாக அவரை ஓய்வு பெரும் நாளில் சஸ்பெண்ட் செய்தோம்,” என்று உயர் அதிகாரிகள் ஆயிரம் காரணங்கள் கூறினாலும் அது ஏற்புடையதல்ல.

ஏனெனில், Charges Pending என்ற நிலையில் இருந்த எத்தனையோ அரசு அதிகாரிகளை, “Retirement allowed without prejudice to the pending enquiry. ” என்ற அடிப்படையில் இதற்கு முன்பு பணி ஓய்வு கொடுத்து அனுப்பிய முன்னுதாரணங்கள் அனைத்துத் துறைகளிலும் ஆயிரக்கணக்கில் உள்ளது.

அவ்வளவு ஏன்? சமீபத்தில் பாலியல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட ராஜேஸ் தாஸ் அவர்களுக்குக் கூட, இந்த தமிழக அரசு பணி ஓய்வை அங்கீகரித்து Retirement கொடுத்துள்ளது.

இப்படியிருக்கும் போது, தமிழ்நாடு காவல்துறையில் கடினமான பணிகளைச் செய்வதற்கு மட்டும், அனைத்துக் காவல் உயர் அதிகாரிகளும், ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை கறிவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்டு, ஓய்வு பெரும் நாளில் அவரை தூக்கி எறிவது, சிறந்த தலைமைக்கு உரிய பண்புகள் அல்ல.

தமிழ் நாடு அரசு, ஏடிஎஸ்பி வெள்ளத்துரைக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட Suspension Order-ஐ திரும்பப் பெற்று, அதற்குப் பதில் “ Retirement Allowed without prejudice to the pending enquiry.” என்ற அடிப்படையில் வெள்ளத்துரைக்கு உடனடியாக Retirement வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று, ஒரு பொதுநல ஆர்வலன் என்ற முறையில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

நல்ல துணிவான, திறமையான காவல் அதிகாரிகளை ஊக்குவிக்க விரும்பும் நண்பர்கள் அனைவரும், இந்தக் கோரிக்கை தமிழ்நாடு முதல்வரின் காதில் ஒலிக்கும் வரை பகிரவேண்டும் என அன்புடன் கோருகிறேன்'' என இவ்வாறு மாணிக்கவாசகம் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓய்வு பெறும் நாளில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை திடீர் சஸ்பெண்ட்.. யார் இந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.