ETV Bharat / state

"விவசாயிகளை கொல்லத் தயங்காத அரசு பாஜக" - முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு சாடல்! - Congress ex Minister Thangkabalu

Congress: டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு போன்றவையை வைத்து தாக்குதல் நடத்துகின்றனர், விவசாயிகளை கொல்லத் தயங்காத அரசு இந்த பாஜக அரசு என முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் தங்கபாலு குற்றம்சாட்டியுள்ளார்.

Former Congress Union Minister Thangkabalu
முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் தங்கபாலு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 7:29 AM IST

Updated : Feb 14, 2024, 11:15 AM IST

Former Minister Thangabalu Press meet

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகர காங்கிரஸ் மைதானத்தில், நேற்று (பிப். 13) திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், இந்திய ஒற்றுமை நீதி பயண விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் பண்டிதர் ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி, பாரத ரத்னா ராஜீவ் காந்தி மூவரின் முழு உருவ சிலை திறப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கொடியேற்றி வைத்து சிறப்பிக்க முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கபாலு, "திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொருப்பாளர்கள்‌ சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்திய அளவில் மாற்றம் வரவேண்டும். தமிழ்நாட்டில் வெற்றிக்கூட்டணி தான் மிகப்பெரிய கூட்டணி. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க போகிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்தும் தெரியும். சரியான முடிவை எடுப்பார்கள் இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழ்நாடு தான். ராகுல் காந்தி சாதிவாரி கணக்கு எடுப்பார் அதன் மூலம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது.‌ எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை. பாஜகவை எதிர்ப்பவர்களை அவர்களின் மீது வழக்கு போடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் எங்கள் கூட்டணிதான் வெல்லும்.28 கட்சிகள் இணைந்து கூட்டணிகளை அமைத்துள்ளோம், இந்த கூட்டணி கொள்கை கூட்டணி, மதசார்பற்ற கூட்டணி, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் தோழனாக காங்கிரஸ் இருக்கிறது. இன்றைக்கு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் உரிமைக்காக விவசாயிகள் டெல்லியை நோக்கி வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் பிஜேபி அரசை கண்டித்து அந்த ஊர்வலம் டெல்லியை நோக்கி வருகிறது. ஏற்கனவே 100 நாட்கள் டெல்லியில் போராடினார்கள். தற்போது மீண்டும் டெல்லியை நோக்கி வருகிறார்கள். அவர்களை பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் தடுத்து நிறுத்துகிறார்கள். அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசியிருக்கிறார்கள்.

விவசாயிகளைக் கொலை செய்ய தயங்காத அரசாக மத்திய அரசு இருக்கிறது, விவசாயிகளுக்கு எதிரான அரசு மத்திய அரசு என்பதை உறுதிபடுத்துகிறது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதை வரவேற்கிறேன், அவருக்கு எனது வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்தார். இம்முப்பெரும் விழாவில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையை நிராகரித்த ஜாக்டோ ஜியோ - முதல்வர் அழைத்துப் பேசக் கோரிக்கை..!

Last Updated : Feb 14, 2024, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.