ETV Bharat / state

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டி கொலை.. பட்டப்பகலில் திருச்சியில் நடந்த துணிகரம்! - EX COUNCILER SON MURDER in Trichy - EX COUNCILER SON MURDER IN TRICHY

ADMK Ex Councilor Son Murder In Trichy: திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADMK Ex Councilor Son Murder In Trichy
ADMK Ex Councilor Son Murder In Trichy
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 5:40 PM IST

திருச்சி: திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் கேபிள் சேகர் இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர் முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ஆவார். இவர்கள் கேபிள் தொழில் மற்றும் பன்றியும் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் (27) என்பவர் டிப்ளமோ இன்ஜினியரின் படிப்பை முடித்துவிட்டு பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். இத்தகைய சூழலில், பன்றி வளர்ப்பு தொழிலில் இவர்கள் குடும்பத்திற்கும் கேபிள் சேகரின் சகோதரர் பெரியசாமி என்பவரின் குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாகவும், அன்றில் இருந்து இன்று வரை இந்த முன் விரோதம் தொடர்ந்து நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று (ஏப்.30) காலை சுமார் 11 மணியளவில் பட்டப்பகலில் கேபிள் சேகரின் மகன் முத்துக்குமாரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். மேலும், ஆயுதங்களுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டுத் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும், திருச்சி மாநகர அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தொழில் போட்டி மற்றும் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதனை அடிப்படையாக வைத்து, போலீசார் விசாரணையில் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், உயிரிழந்த முத்துக்குமார் மீதும் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி அரியமங்கலத்தில் இன்று (ஏப்.30) பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் உறங்கும் பெண்களை குறிவைக்கும் டார்ச் லைட் திருடன்.. கரூரில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.