ETV Bharat / state

கோத்தகிரியில் திமுக ஒன்றிய செயலாளர் வாகனத்திலிருந்து ரூ.8 லட்சம் பறிமுதல்! - LOK SABHA ELECTION 2024

Kothagiri Money Seize: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் திமுக ஒன்றியச் செயலாளர் நெல்லை கண்ணனின் சொகுசு காரில் எடுத்து வரப்பட்ட 8 லட்சம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Kothagiri Money Seize
Kothagiri Money Seize
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 4:08 PM IST

Kothagiri Money Seize

நீலகிரி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் பல பகுதிகளில் வாகனங்களில் எடுத்துச் செல்லும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி, பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று, கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை ஜக்கணரை சக்த்தா ஹட்டி பகுதியில், திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணனின் சொகுசு காரை, திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த நவீன் ஓட்டி வந்தபோது, தேர்தல் பறக்கும் படையினர் காரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, வாகனத்தில் 8 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி தலைமையிலான குழு, பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு வழங்க எடுத்துச் செல்லப்பட்ட பணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.