ETV Bharat / state

கன்னியாகுமரி கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு.. சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த சோகம்! - kanniyakumari tourist death - KANNIYAKUMARI TOURIST DEATH

kanniyakumari tourist death: கன்னியாகுமரியில் உள்ள பிரபல லெமூர் கடற்கரைக்கு சுற்றுலா வந்த திருச்சி தனியார் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் புகைப்படம்
ஆம்புலன்ஸ் புகைப்படம் (CREDIT - ETV BHARAT TAMILNADU)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 1:30 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (24) . இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் திருமணம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதற்காக முத்துக்குமாருடன் பயின்று வரும் 12 மாணவ, மாணவிகள், நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். அதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்றுள்ளனர்.

அந்த வகையில், இன்று (திங்கட்கிழமை) காலை பிரபல சுற்றுலா தளமாக லெமூர் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அப்போது 9 பேர் கடலில் இறங்கி குளித்த நிலையில் அவர்களை ராட்ச அலை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கடலில் சிக்கியவர்களை மீட்ட போது, 3 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், கடலில் இருந்து மீட்கப்படவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரவின் சாம், காயத்ரி, சாருகவி, வெங்கடேஷ் மற்றும் தர்சித் ஆகிய 5 பேரின் உடல்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராஜகமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: +2 ரிசல்ட்: பாடவாரியாக தேர்ச்சி, சென்டம் எடுத்தவர்கள் விவரம்! - TN 12th Results 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.