ETV Bharat / state

குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் பலி- அமைச்சர் செஞ்சி மஸ்தான்! - Kuwait building fire 5 tamils dead

குவைத் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அங்குள்ள தமிழ் சங்கங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
TN Minister Gingee Masthan (ETV Bharat)
author img

By PTI

Published : Jun 13, 2024, 12:57 PM IST

சென்னை: குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குறித்து தூதரகம் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவல் வழங்கப்படவில்லை என்றும் அங்குள்ள தமிழ் சங்கங்கள் மூலம் விசாரித்ததில் 5 பேர் உயிரிழந்து இருப்பது தெரியவந்து இருப்பதாகவும் கூறினார்.

மேலும், உயிரிழந்தவர்கள் தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் பேராவூரணி பகுதிகளைச் சேர்ந்த ராம கருப்பன், வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷெரீப் மற்றும் ரிச்சர்ட் என அடையாளம் காணப்பட்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

இதனிடையே தீ விபத்து தொடர்பான அனைத்து தகவல்களும் மாநில அரசுக்கு வழங்கப்படும் என்றும் தொடர்ந்து அங்குள்ள சூழலை கண்காணித்து வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 14 பேர் தீ விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் அடுக்குமாடி குடியிருப்பின் பல்வேறு பகுதிகளிலும், வீடுகளிலும் இருந்ததே பெரிய அளவில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களால் உருவான கரும்புகை சுவாசித்ததால் அதிகளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மக்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கரும் புகை காரணமாக குடியிருப்பை விட்டு வெளியே வரமுடியாமல் போனதும், அடுக்குமாடியின் மேல் பரப்புக்கு செல்ல முயன்ற போது அங்கிருந்த கதவுகள் மூடப்பட்டு இருந்ததாலும் பலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குவைத் போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் மற்றும் கட்டடத்தில் பணியாற்றி வந்த எகிப்தை சேர்ந்த காவலாளி ஆகியோரை கைது செய்து மறு உத்தரவு வரும் வரை சிறையில் அடைக்கவும் குவைத் துணை பிரதமர் ஷேக் ஃபஹத் அல் யூசப் அல் சபா உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்துக்கு என்ன காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்! - Kuwait Building Fire

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.