ETV Bharat / state

வேலூர்: வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாற்றி விற்பனை செய்த 5 பேர் கைது! - Five people arrested - FIVE PEOPLE ARRESTED

வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாற்றி, சட்டவிரோதமாக கல்லுரி மானவர்களுக்கு விற்பனை செய்த 5-பேர் கொண்ட கும்பலை வேலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களுடன் பாகாயம் போலீசார்
கைது செய்யப்பட்ட நபர்களுடன் பாகாயம் போலீசார் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 3:01 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளைப் போதை மாத்திரைகளாக மாற்றி, அவற்றை சட்டவிரோதமாக இளஞ்சிறார்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பாகாயம் காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர்களின் தலைமையிலான போலீசார், முல்லை நகர் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் இரவு நேரத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிஷோர்குமார்(19) என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று, ஆரஞ்சு நிறம் கொண்ட மாத்திரைகளான (Tapentonal) என்னும் வலி நிவாரணி மாத்திரைகளைப் போதை மாத்திரைகளாக மாற்றி பிளாஸ்டிக் கவரில் வைத்து முத்துமண்டபம் பகுதியைச் சேர்ந்த இளஞ்சிறார்க்கு விற்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டான்.

இதனையடுத்து கிஷோர்குமாரிடம் போலீஸ் நடத்திய தொடர் விசாரணையில், கிஷோரின் மாமா ரஞ்சித் என்பவர் மூலம் பள்ளிகொண்டவை சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளையும் அதற்குப் பயன்படுத்தும் சிரஞ்சிகளையும் சட்டவிரோதமாக வாங்கி வந்துள்ளார்.

பின்னர் வேலூர் கஸ்பாவை சேர்ந்த பூபாலன், ஓல்டு டவுன் விக்னேஷ் மற்றும் சிவக்குமார் ஆகியோர்களுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களைக் குறிவைத்துக் கடந்த இரண்டு மாதங்களாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாகாயம் காவல் நிலையம் போலீசார் முக்கிய குற்றவாளிகளான வேலூர் மாநகரைச் சேர்ந்த ரஞ்சித்(29) சிவக்குமார்(38) பூபாலன்(27) மற்றும் கிஷோர்குமார்(19), விக்னேஷ்(19) ஆகிய ஐந்து நபர்களைக் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடமிருந்து வலி நிவாரணி மற்றும் போதை மாத்திரைகளையும் அதனை விற்கப் பயன்படுத்திய கார், மொபைல்கள் மற்றும் இரண்டு இருச் சக்கர வாகனங்களை ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சர்ச்சையை கிளப்பிய சர்குலர்.. பெரம்பலூர் மாவட்ட கல்வி அதிகாரியை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.