ETV Bharat / state

நகை வியாபாரியை கடத்தி 2 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த கும்பல்! சென்னை டு மதுரை.. தேடி பிடித்த தனிப்படை! - CHENNAI GOLD SELLER KIDNAP CASE

சென்னை சவுக்கார்பேட்டையில் நகை விற்பனையாளரை கடத்திய சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கைதான செல்லப்பாண்டி, நாககேந்திரன்
கைதான செல்லப்பாண்டி, நாககேந்திரன் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 12:21 PM IST

சென்னை: ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் (60). இவர் தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நகை கடைகளில் நகையாகவோ அல்லது தங்க கட்டிகளாகவோ சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி சென்னையில் 2 கிலோ தங்கத்தை சுப்பிரமணியன் வாங்கிவிட்டு அன்று இரவே பாண்டியன் விரைவு ரயிலில் ஏறி அடுத்த நாள் அதிகாலை மதுரை வந்துள்ளார்.

அப்போது, அவரிடம் கத்தியை காட்டி 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் ஆட்கள் இல்லாத இடத்தில் வைத்து 2.054 கிலோ தங்க நகை மற்றும் பாலசுப்ரமணியனின் செல்போன், 3,500 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவரை காரில் இருந்து இறக்கி விட்டு தப்பி ஓடியது. பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியன் உடனடியாக அருகில் உள்ள ஊருக்கு சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மூன்று தனிப்படை

தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை செய்த போது, சம்பவம் நடந்த இடம் மதுரை ரயில்வே நிலையம் என்பதால் மதுரை திலகர் திடல் காவல் நிலையத்திற்கு பாலசுப்பிரமணியனை அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், ரயில் நிலையம் மற்றும் காரில் கடத்தப்பட்ட இடம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், பாலசுப்பிரமணியன் வாக்குமூலத்தை வைத்து காரில் கடத்தப்படும் போது 5 பேர் இருந்ததாக தெரிவித்ததன் பேரில், 5 பேர் கொண்ட கும்பல் என்பதும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், கார் பதிவெண் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியன் சென்னை சவுகார் பேட்டையில் அடிக்கடி நகை வாங்கி வந்ததும், அவரை போன்று மற்றொரு நகை புரோக்கர் நாகேந்திரன் மூளையாக இருந்து அவரது தூண்டுதலின் பெயரில் மற்றவர்கள் செயல்பட்டதும் தெரிய வந்தது.

மூன்று பேரிடம் விசாரணை

தொடர்ந்து, தனிப்படை போலீசார் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையப்பட்டியை சேர்ந்த பாக்கியராஜ் (39), திருநெல்வேலியை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மேல காடுவெட்டி பகுதியை சேர்ந்த முத்து மணிகண்டன் (26), மேலூர் அருகே வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் (41) என்பதும் தெரிய வந்தது. 3 பேரையும் முதற்கட்டமாக கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் சென்னையிலிருந்து பாலசுப்பிரமணியன் அடிக்கடி மதுரைக்கு தங்க நகைகளை கிலோ கணக்கில் வாங்கிச் செல்வதும், இதனை அறிந்த நாகேந்திரன் தங்களை தூண்டியதாகவும் அதன் பேரில் கடத்தலில் ஈடுபட்டதாகவும் பிடிபட்ட மூவரும் தெரிவித்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இந்த நகை விற்பனை வியாபாரியின் கடத்தலில் மூளையாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த நகை புரோக்கர் நாகேந்திரன் மற்றும் செல்லப்பாண்டி ஆகிய இருவரும் தலைமறைவாகிய நிலையில் 2 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.

சென்னையில் இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசாரை அனுப்பி வைத்து 2 நாட்களாக தேடி வந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் வைத்து செல்லப்பாண்டியையும், சென்னை அருகே உள்ள பம்மலில் வைத்து நாகேந்திரனையும் நேற்று மாலை கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும் இருந்து 1,47,88,800 மதிப்புள்ள 2.056 கிலோ தங்கம், 9 செல்போன், கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.