ETV Bharat / state

திண்டுக்கல்லில் களைகட்டிய மீன்பிடி திருவிழா.. போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற கிராம மக்கள்! - Fishing festival at Dindigul

Fishing festival at Dindigul: திண்டுக்கல் அருகே மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுற்றியுள்ள 18 பட்டியைச் சேர்ந்த கிராம மக்கல் மீன்களை கூடை கூடையாக அள்ளிச் சென்றனர்.

மீன்பிடி திருவிழா
மீன்பிடி திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 11:36 AM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள அணைப்பட்டி கிராமத்தில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம சமுத்திரம் குளம் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து குடகனாறு மூலம் வரும் தண்ணீர் இந்த குளத்தில் சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது.

மீன்பிடி திருவிழாவில் மக்கள் மீன் பிடிக்கும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த குளத்தில் வருடந்தோறும் மீன் பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக குளம் நிரம்பாததால் மீன்பிடித் திருவிழா நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக மழை பெய்ததையடுத்து குளம் நிரம்பி வருகிறது. தற்போது ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

முன்னதாக பிரம்ம சமுத்திர கரையில் உள்ள கன்னிமார் தெய்வம், கூத்த அப்புச்சி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பிரம்ம சமுத்திரம் ஆயக்கட்டு தலைவர் பழனிச்சாமி கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார். சிக்னல் கிடைத்ததும் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பினர்.

இதில் அணைப்பட்டி, கொட்டப்பட்டி, கோட்டூர், ஆவாரம் பட்டி, அனமந்தராயன் கோட்டை, மயிலாப்பூர், பாலம் ராஜாபட்டி, குட்டத்துப்பட்டி உள்ளிட்ட 18 பட்டியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வலை வீசியும், கூடைகளை பயன்படுத்தி மீன்களை உற்சாகமாக அள்ளி சென்றனர்.

அப்போது, கட்லா, ஜிலேபி, கெண்டை, விரால், மிருகாள், ரோகு, அவுரி, தேளி விரால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகையான மீன்கள் வலையில் சிக்கியது. அப்பகுதியினர், மீன்களை கூடை கூடையாக தங்களது வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர். இதனால், சுற்றியுள்ள எட்டுப்பட்டியிலும் மீன் குழம்பு வாசம் கமகமத்தது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செந்தில் குமரன் கூறுகையில், "பிரம்ம சமுத்திரம் குலம் மூலம் சுமார் 1,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் அடைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்து வட கிழக்கு பருவமழை துவங்குவதை வரவேற்கும் வகையில், இந்த மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பாரம்பரியமாக இங்கு மீன்பிடி திருவிழா நடத்தப்படுகிறது. 18 பட்டி சுற்றுவட்டாரத்திலிருந்தும் ஜாதி, மத பேதமின்றி மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "750 ரூபாய் மெயின்டனன்ஸ் சார்ஜ் வாங்கினால் போதாது சுத்தம் செய்யனும்" - கே.பி. பார்க் குடியிருப்புவாசிகள் குமுறல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.