ETV Bharat / state

கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் பற்றி எரிந்த பிரியாணி கடை; கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம் - Fire in Briyani Shop - FIRE IN BRIYANI SHOP

Fire In Briyani Shop: கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள பிரபல பிரியாணி கடையில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரியாணி கடையில் தீ விபத்து
பிரியாணி கடையில் தீ விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 9:17 PM IST

தஞ்சாவூர் : கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் இன்று திடீரென கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையறிந்த கடையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

பிரியாணி கடையில் தீ விபத்து வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்து காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், துணை மேயர் சு.ப.தமிழழகன், முன்னாள் எம்எல்ஏ ராம ராமநாதன், கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்தி வாசன், கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் சிவா செந்தில் குமார் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : வேலூரை உலுக்கிய பெண் குழந்தை கொலை வழக்கு.. தலைமறைவான தம்பதி கைது..! கலங்கடிக்கும் பின்னணி! - Vellore baby girl death case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.