ETV Bharat / state

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? முக்கிய வழிமுறைகள்! - BURSTING FIRECRACKERS PRECAUTIONS

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை எப்படி பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர் சரவணன் கூறிய தகவல்களைக் காணலாம்.

பட்டாசு கோப்பு படம், தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்
பட்டாசு கோப்பு படம், தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் (Credits - Getty images, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 5:45 PM IST

சென்னை: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு தான். இந்த நிலையில், பட்டாசுகளை எப்படி பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர் சரவணன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பாக அனைத்து வகை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழுமையாக அறிவுரைகளைக் கடைபிடித்து விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர் சரவணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பட்டாசு வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டியவை:

  • பெரியவர்கள் முன்னிலையில் பட்டாசு வெடிக்க வேண்டும்.
  • நீண்ட வத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளியில் தண்ணீரை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • செருப்புகளை அணிந்து கொள்ள வேண்டும்.
  • ராக்கெட் பட்டாசுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், திறந்தவெளி மைதானத்தில் வெடிக்கலாம்.
  • மருத்துவமனை, கோயில், குடிசை வீடுகள் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது.
  • அதிகமாக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
  • அரசு அறிவித்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும்.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை 2024; அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

தீக்காயம் ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும்?

  • தீக்காயம் ஏற்பட்டவுடன் காயத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும். சிலர் தண்ணீர் பட்டால் கொப்புளம் வரும் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை, தண்ணீர் ஊற்றிவிட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
  • இங்க், புளித்த மாவு ஆகியவற்றை காயம் ஏற்பட்ட இடங்களில் வைக்கக்கூடாது.

தீ விபத்து ஏற்பட்ட உடன் செய்ய வேண்டியவை:

  • தீ விபத்து ஏற்பட்ட உடன் 3 நிமிடங்களுக்கு உள்ளாக அந்த இடத்தை அடையும் வகையில், சென்னையில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 70 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும், 50 மெட்ரோ குடிநீர் வாகனங்களும் எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளது.
  • தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்னதாக நல்ல உடல் வலிமையுடன் இருப்பவர்கள் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோரை பாதுகாப்பாக வெளியேற்றலாம்.
  • முடிந்தால் மின்சாரப் பெட்டியை அணைத்து விட்டு, கேஸ் சிலிண்டரை வெளியே கொண்டு வந்துவிடவேண்டும்.
  • மழை பெய்யவில்லை என்றால், தீ விபத்து தொடர்பாக அதிக அழைப்புகள் வரும். மழை பெய்தால் அழைப்புகளின் எண்ணிக்கை குறையும். இரண்டிற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.