ETV Bharat / state

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை வழிமறித்து விவசாயிகள் போராட்டம்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

கும்பகோணம் அருகே கல்விக்குடியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளர் ஆர்.சுதா பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் அவரது பிரச்சார வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

R sudha campaign
ஆர் சுதா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 3:49 PM IST

ஆர் சுதா

தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா, முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் தலைமையில், கும்பகோணம் அருகே கல்விக்குடி கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ‘கை சின்னத்தில்’ வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.400 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், இன்றுடன் 501வது நாளாக கல்விக்குடி கிராமத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வேட்பாளர் சுதா வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்து விவசாயிகளின் பிரச்சனை குறித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்றால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் போலீசார், இரு தரப்பினரையும் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, வேட்பாளர் சுதா தனது பரப்புரை பயணத்தை அங்கிருந்து மீண்டும் தொடங்கினார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கூறுகையில், “விவசாயிகள் 501வது நாளாக போராடி வருகிறோம். இதுவரை திமுக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. அரசே அந்த சர்க்கரை ஆலையை மறைமுகமாக நடத்துகின்றனர். அதனால், அவர்கள் விவசாயிகளை தொடர்ந்து புறக்கணிக்கின்றனர். எனவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கரும்பு விவசாயிகளும் ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணிக்கிறோம். விவசாயிகளில் ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது.

இன்று மயிலாடுதுறை திமுக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளர் சுதா பிரச்சாரம் செய்தார். அவரை மறித்து நாங்கள் எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம். அவர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால், எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை.

முன்னதாக இப்பிரச்சார பயணத்தை சுவாமிமலையில் தொடங்கி வைத்த திமுக மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான சு கல்யாணசுந்தரம், கரும்பு விவசாயிகள் முற்றுகையிடுவார்கள் என முன்னதாக தெரிந்து கொண்டு, கல்விக்குடி கிராம பரப்புரைக்கு வராமல் சென்றுவிட்டார். எனவே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் இப்பகுதி கரும்பு விவசாயிகள் ஒட்டு மொத்தமாக திமுக கூட்டணிக்கு எதிராக வாக்கு செலுத்த உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குடும்ப பிரச்சனையில் வீட்டிற்கு தீ வைத்த கணவர்! பரிதாபமாக உயிரிழந்த தம்பதிகள்.. - COUPLES DIED IN KARAIKUDI

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.