ETV Bharat / state

வகுப்பறையில் பேராசிரியர் செய்த செயல்.. ஈடிவி பாரத்திற்கு கிடைத்த பிரத்யேக வீடியோவின் பின்னணி என்ன? - Salem Periyar University Issue - SALEM PERIYAR UNIVERSITY ISSUE

professor sleeps in classroom: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பதிவாளர் தங்கவேலு, ஈடிவி பாரத்திற்கு பிரத்தியேகமாக அளித்த வீடியோவில், அப்பல்கலையின் உதவி பேராசிரியர் ஒருவர் வகுப்பறையில் தூங்கி விழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறையில் தூங்கி விழும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்
வகுப்பறையில் தூங்கி விழும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் (Credit - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 7:51 PM IST

உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் தூங்கும் காட்சிகள் (Credits - ETV Bharat TamilNadu)

சேலம்: கடந்த சில மாதங்களாக சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவற்றைக் கண்டித்து அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் என்பவர் வகுப்பறையில் ஆழ்ந்து உறங்கும் காட்சிகளை, பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற பதிவாளர் (பொறுப்பு) தங்கவேலு ஈடிவி பாரத்திற்கு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை.

ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினரும் திட்டமிட்டு நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் வகுப்பறையில் மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுக்காமல் தினந்தோறும் உறங்குவதையே வேலையாக வைத்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு புகார் அனுப்பியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

மேலும், "உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் அதிமுகவில் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். தனது குறைகளை மறைப்பதற்காக குறிப்பிட்ட சாதியினரை ஒருங்கிணைத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது ஊழல் புகார்களை திட்டமிட்டுக் கூறி வருகிறார். மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் பொறுப்பற்று செயல்படும் வைத்தியநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என முன்னாள் பதிவாளர் (பொறுப்பு) தங்கவேலு வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் வகுப்பறையில் உறங்குவதாகவும், பாடம் எடுப்பதில்லை என்றும் மாணவர்கள் தரப்பில் ஏற்கனவே அரசுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பதிவாளர் (பொறுப்பு) தங்கவேலு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "தமிழகத்தில் மின்வெட்டு தொடர் கதையாகவே நீடிக்கும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.