ETV Bharat / state

நிலத்தகராறில் கூலி ஆட்களை ஏவி குடும்பத்திற்கு மிரட்டல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்! - Ex servicemen threatened in Vellore

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 7:17 PM IST

Ex servicemen threatened in Vellore: குடியாத்தம் அருகே நிலத் தகராறில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் அடி ஆட்களை ஏவி கொலை மிரட்டல் விடுத்த

strangers threatening CCTV image
வீடு புகுந்து மிரட்டிய அடியாட்கள் சிசிடிவி படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் அன்பரசன் - கலைச்செல்வி தம்பதிக்கு ஒரு பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். மேலும், அதே கிராமத்தில் அன்பரசனுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அன்பரசனின் விவசாய நிலம் அருகே கண்ணையன் என்பவருடைய விவசாய நிலமும் உள்ளது.

வீடு புகுந்து மிரட்டிய அடியாட்கள் சிசிடிவி வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், அன்பரசன் தன்னுடைய விவசாய நிலத்தில் தென்னை மரத்தில் இருந்து கீழே விழும் ஓலைகளை கண்ணையனின் நிலம் அருகே சேர்த்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது அன்பரசனுக்கும், கண்ணையனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று கண்ணையன் மற்றும் அன்பரசனை ஊரில் இருந்த பெரியவர்கள் சமாதானம் பேசுவதற்காக அழைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறு, கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதில் கண்ணையன் மற்றும் அவரது உறவினர்கள், அன்பரசன் மற்றும் அவருடைய மகன்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் ஏற்பட்ட அன்பரசனின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை கண்ணையன் அவருடைய உறவினரான சில நபர்களை ஏவி விட்ட நிலையில், அந்த நபர்கள் அன்பரசனை தாக்குவதற்காக ஆயுதங்களுடன் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை தன்னையும், தன் குடும்பத்தினரையும் தாக்க ஆயுதங்களுடன் வரும் நபர்களை கண்ட அன்பரசன் மற்றும் அவரது மனைவி வீட்டிற்கு உள்ளே சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளனர். பின்னர், ஆயுதங்களுடன் வந்த அந்த நபர்கள், அன்பரசனை தகாத வார்த்தைகளால் பேசி அன்பரசனின் வீட்டின் கதவை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

பின்னர், அன்பரசன் குடியாத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில் வந்த காவல்துறையினர், அன்பரசனின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வேலூர் சத்துவாச்சாரியில் பெண்ணிடம் செயின் பறிப்பு.. சகோதரர்கள் கைது! - Chain Snatching In Vellore

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.