ETV Bharat / state

செந்தில் பாலாஜிக்கு 50வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! ஆகஸ்ட் 5 இல் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணை - senthil balaji case

Senthil Balaji judicial custody: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)
செந்தில் பாலாஜி (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 6:14 PM IST

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 30ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'உயிருக்கு பயந்தோடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு'.. தூத்துக்குடி சம்பவத்தில் நீதிபதிகள் வேதனை கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.