ETV Bharat / state

இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை இதுதான்! - திமுகவை கலாய்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்! - EX MINISTER SELLUR RAJU

200 தொகுதிகளில் ஜெயிப்போம் என திமுக சொல்வது தான் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை என்றும், 234 தொகுதிகளிலும் திமுக தனித்து நிற்க தயாரா? எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2024, 8:34 PM IST

மதுரை: மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மகன் ஆர்.ஜே.தமிழ்மணி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், செல்லூர் ராஜூ தலைமையில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மழை வெள்ளத்தை திமுக அரசு சரியாக கையாளவில்லை. தரம் இல்லாத நலத்திட்ட பொருட்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. எங்கு சென்றாலும் போட்டோ சூட் நடத்துகிறது. திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறது. தற்போது பெய்தது மிகவும் சாதாரண மழை தான். அதிமுக ஆட்சி காலத்தில் இதைவிட அதிகப்படியான கனமழை கொட்டி தீர்த்தது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

200 தொகுதிகளில் ஜெயித்து விடுவோம் என திமுக சொல்வது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை இதுதான். அரசு பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் என்று பல அரசு ஊழியர்களின் நம்பிக்கையை திமுக அரசு இழந்துள்ளது. ஆட்சி சுகத்தை கண்டு கொண்டு, குடும்பத்தில் இருப்பவர்களை துணை முதலமைச்சர் ஆக்கிவிட்டு குடும்பமே சேர்ந்து ஆட்சியை நடத்தி வருகின்றனர்.

மருமகன் சபரீசன் ஒருபுறம் அதிகாரம் மையமாக செயல்படுகிறார். உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையில் இருந்து வந்து சினிமா செய்தியே நான் பார்ப்பதில்லை என்று பேசுகிறார். உதயநிதி ஸ்டாலின் இல்லாமல் ஒரு திரைப்படம் வெளியிட முடியாது.

எல்லாம் அவர்களின் கம்பெனி சார்ந்தது. மக்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று இந்த ஆட்சி நினைக்கிறது. ஆனால் தமிழக மக்கள் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டார்கள். ஒருபுறம் வேங்கை வயல், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரம் இந்த விஷயங்களில் திமுக அரசு சரியாக செயல்படவில்லை. அதனால் தான் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.

இதையும் படிங்க : "நானும் இறுமாப்போடு சொல்கிறேன் 200 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - கனிமொழி சவால்!

நாங்கள் போட்ட பிச்சையில் தான் பட்டியல் இன மக்கள் நீதிபதியாக இருக்கிறார்கள் என்று அமைச்சர் சொல்கிறார். மற்றொரு அமைச்சர் ஓசியில் பஸ் போகிறது என்று சொல்கிறார். மக்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள்.

மன்னர் பரம்பரையை நாம் ஒழித்து விட்டோம். கலைஞர் பரம்பரையை இன்னும் ஒழிக்க முடியவில்லை. தாத்தா முதலமைச்சர், அப்பா முதலமைச்சர். பேரன் முதலமைச்சர், பெரியப்பா மத்திய அரசின் முக்கிய அமைச்சர், திமுக குடும்பத்தினரின் அதிகார மையம் தான் நடக்கிறது. சனாதனத்தை எதிர்த்து பேசும் நபர்கள் முதலில் குடும்பத்தை திருத்த வேண்டும். வீட்டுக்குள் பூஜை நடக்கிறது; அப்புறம் எதற்கு சமாதானம் பற்றி பேசுகிறார்கள்.

விஜய் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. திருமாவளவனுக்கு யாரும் நெருக்கடியை கொடுக்க முடியாது. மற்றவர்கள் பேசுவார்கள் என்று அடக்கி வாசிக்கிறார். நான் சவால் விடுகிறேன். 234 தொகுதிகளிலும் திமுக தனித்து நிற்க தயாரா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.