ETV Bharat / state

”சின்னப்பயலே சின்னப்பயலே”..எம்ஜிஆர் பாடலை பாடி அண்ணாமலையை கலாய்த்த மாஜி அமைச்சர்! - kadambur raju about murugan maanadu - KADAMBUR RAJU ABOUT MURUGAN MAANADU

EX Minister Kadambur Raju: பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாடு என்பது திமுகவின் சுயவிளம்பரத்திற்காக நடத்தப்பட்ட மாநாடு, கடவுளை ஏமாற்றுக்கின்ற மாநாடு, இதுவரை திமுகவின் ஆட்சியில் மக்களை ஏமாற்றி வந்தனர். தற்போது கடவுளை ஏமாற்ற முயற்சித்துள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 7:49 PM IST

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், ‭கோவில்பட்டி அருகே உள்ள காமராஜர் நகர், இபி காலனி, அன்பு கார்டன் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் வாறுகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கடம்பூர் ராஜு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் இருந்த போதே போராடியது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் மருத்துவக்கல்லூரி படிக்கும் நிலை உருவாகி உள்ளது.

ஆனால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வினை ரத்து செய்து விடுவதாக கூறிய திமுக 3 ஆண்டுகளாகியும் அதனை செய்யாமல் ஏமாற்றி வருகிறது. அண்ணா, எம்ஜிஆர் இரண்டு தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்பதனைக் காட்டுகிறது.

அரசியல் நாகரீகத்துடன், யதார்த்தமாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். ஆனால், அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசி வருகிறார். இருவரின் பேட்டிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். யாருடைய தகுதி என்ன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

’சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா.

நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா, எண்ணிப் பாரடா-நீ

எண்ணிப் பாரடா, ஆளும் வளரணும், அறிவும் வளரணும்

அதுதாண்டா வளர்ச்சி’ - என்று அண்ணாமலை போன்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் பாடி வைத்து சென்றுள்ளார்.

ஈபிஎஸ் விவகாரம் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்று கூடி எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்ந்தேடுத்தோம். பாஜக மாதிரி வேறு எந்த கட்சி எம்எல்ஏக்களை நாங்கள் விலைக்கு வாங்கவில்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் துயரப்பட்டு இருந்த எங்களுடன் அவருடைய நிழலாக இருந்த சசிகலா எங்களுக்கு ஆதரவாக இருந்தார். அதிமுகவின் 124 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் கையெழுத்தியிட்டு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்ந்தேடுத்தோம்.

பாஜக மாதிரி வடமாநிலங்களில் குழப்பம் செய்தோ அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்த மாதரி நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் கூட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி குழப்பத்தினை ஏற்படுத்த பாஜக முயன்று வருவதாக செய்து வருகிறது.

கூவத்தூரில் எங்களுடன் அப்போது இருந்த சசிகலாவிடம், எடப்பாடி பழனிசாமி ஆசி பெற்றதாகவும், அதில் அரசியல் இல்லை, அப்படி பதவி வாங்க வேண்டிய அவசியமும் எழவில்லை. அப்போது அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை. வடமாநிலங்களில் பாஜக அசிங்கமான அரசியல் நடத்தி, பேரம் பேசி, ஆட்சியை கவிழ்த்து, அரசியலை கேலி கூத்தாக்கிய கட்சி பாஜக.

ரஜினி - துரைமுருகன் விவகாரம் : நடிகர் ரஜினி இடதிற்கு ஏற்றவாறு பேச வேண்டும் என்பதற்காக பேசியுள்ளார். இதில், உள் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. புத்தகம் வெளியீட்டு விழாவில், அதை பற்றி பேசமால் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பற்றி மூத்த அமைச்சர் துரைமுருகன் பதில் கூறி இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் பேசியதை திமுகவினரே ஏற்றுக்கொள்ள முடியதாக இருப்பது தான் நிதர்சமான உண்மை.

அதிமுக ஆட்சியின் போது இந்து அறநிலையத்துறையின் செய்யப்பட்ட பணிகள் குறித்தும், நடைமுறைப்படுத்த திட்டங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அப்போது அவர் நடிகராக மட்டும் இருந்தார்.

முருகன் மாநாடு : முருகனுக்கு தமிழ், ஆங்கிலம் தெரியுமா என்று விமர்சித்தவர்கள் திமுகவினர். ராமர் என்ன என்ஜீனியாரா? என்று சேது சமுத்திர திட்டம் தொடர்பாக விமர்சனம் செய்தனர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, எப்போதும் திமுக இரட்டை நிலைப்பாட்டில் தான் இருக்கும்.

இந்து சமய அறநிலைத்துறை அதிமுக ஆட்சியில் அறமாக இருந்தது. இன்று அதை கேலிக்குத்தாக்கி வைத்து உள்ளனர். பழனியில் நடைபெற்ற மாநாட்டில் பலநாடுகளில் இருக்கும் முருகப் பக்தர்கள் அழைக்கப்படவில்லை. பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாடு என்பது திமுகவின் சுய விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட மாநாடு.

கடவுளை ஏமாற்றுக்கின்ற மாநாடு, இதுவரை திமுகவின் ஆட்சியில் மக்களை ஏமாற்றி வந்தனர். தற்போது கடவுளை ஏமாற்ற முயற்சித்துள்ளனர் என்பது தான் இந்த மாநாட்டின் மூலம் நமக்கு கிடைத்த செய்தி. திமுகவிற்கு கடவுள் தண்டனை கிடைக்கும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : களைகட்டிய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு; குவியும் பொதுமக்கள்! - Palani Muthamil Murugan Conference

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.