ETV Bharat / state

"பாஜகவில் மூத்தவர்களுக்கு அதிக மரியாதை கிடைக்கும்" - துரைமுருகனுக்கு மறைமுக அழைப்பு விடுத்த தமிழிசை? - tamilisai about durai murugan - TAMILISAI ABOUT DURAI MURUGAN

Tamilisai Soundararajan: பாஜகவில் மூத்தவர்களுக்கு அதிக மரியாதை கிடைக்கும். அதனால் உறுப்பினராக சேர்ந்து கொள்ளுங்கள் எனவும், தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதனை கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து என்றும் அண்ணாமலைக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுரை கூறியுள்ளார்.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 8:56 PM IST

சென்னை: நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள ஶ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயிலில் பாஜகவின் நன்மைக்காக சிறப்பு பூஜையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார்.

தமிழிசை செளந்தரராஜன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை முதலமைச்சரிடம் எதிர்பார்த்தோம். முருகன் மாநாட்டை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நேரில் போகவில்லை. முருகன் என்றால் நேரில் சொல்ல மாட்டார் போல. சாதி, மத, இன வேற்றுமை பார்ப்பதில்லை என்கின்றனர். அதேபோல இந்து மதத்தை வேற்றுமையாக பார்க்கவில்லை என்றால், கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்க வேண்டும்.

அவரது நம்பிக்கையை தவிர்த்து மற்றவரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் பொறுப்பாக இருக்க வேண்டும். முதலமைச்சரிடம் இருந்து கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பெண்களுக்கு அங்கீகாரம் : சகோதரி விஜயதரணி ஒரு கட்சியில் இருந்து விலகி வேரு கட்சியில் இணைந்தவுடன் பதவி கிடைக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது இயல்புதான். பாஜகவில் இணைந்த அனைவருக்கும் பதவி கிடைக்கும். சிறிது காலம் ஆகலாமே தவிர காலம் கடக்காது. விஜயதாரணி நம்பிக்கையோடு இருக்க வேண்டும். எல்லாருக்கும் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். அதிலும் பெண்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.

முருகன் மாநாடு : பழனியில் நடந்த முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள பள்ளிகளில் கந்த சஷ்டி கவசம் போதிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது குறித்த கேள்விக்கு, கந்த சஷ்டி கவசத்தில் உள்ள பொது கருத்துக்கள் பள்ளி மாணவர்களுக்கு போய் சேர வேண்டும். இந்து அறநிலைத்துறை ஆளுமைக்கு உட்பட்ட பள்ளிகளில்தான் கந்த சஷ்டி கவசம் போதிக்கப்பட வேண்டும் என தீர்மானத்தில் இருக்கிறது. எக்கச்சக்கமான கிறிஸ்தவப் பள்ளிகளில் கிறிஸ்தவ பாடல்கள் போதிக்கப்படுகிறது. இதனை எதிர்க்காமல் ரவிக்குமார், இந்து நம்பிக்கை வேண்டாம் என்பதனை ஒத்துக்கொள்ள முடியாது.

இந்து கோயிலின் வருமானம் தேவை. ஆனால் இந்து கோயில்களின் நம்பிக்கை இவர்களுக்கு தேவைப் படுவதில்லை. முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காவி மயமாக்கப்படுவதாக ஒத்துக்கொள்ள முடியாது. பண்பாட்டு ரீதியாக இது சரிதான். பண்பாடு என்பது வாழ்வியலோடு ஒற்றுப் போவது. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பள்ளிகளில் தான் இது நிறைவேற்றப்படும் எனக் கூறியிருக்கிறார்கள்.

கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளின் வருமானத்தை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என யாரும் சொல்வதில்லை. இந்து மத கோயில்களில் இருந்து வரும் வருமானம், மதம் சார்ந்த வருமானம், காவி வருமானம் என சொல்லி இந்த வருமானம் தேவையில்லை என அவர் சொன்னால் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.

அண்ணாமலை விமர்சனம் : பாஜகவின் பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை எதிர்கட்சித் தலைவரை கடுமையாக விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு, இன்னொரு தலைவரின் பேச்சுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதனை கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அண்ணாமலை சொல்லி இருக்கிறார். கூட்டணி குறித்து மாநில தலைவர் கூறியிருப்பது அவரது உரிமை. ஆனால் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதை வைத்து அதனை முடிவு செய்துவிட முடியாது.

கட்சியில் உள்ள மற்ற தலைவர்களின் கருத்து, நிர்வாகத்தின் கருத்து கேட்கப்பட்டு அதிலிருந்து ஒரு முடிவு எடுக்கப்படும். திமுக ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் என்பதை எங்களது ஒற்றை குறிக்கோள். செப்டம்பர் 25 வரை எங்களது முழுக்கவனம் உறுப்பினர் சேர்க்கை.

ரஜினிகாந்த் விவகாரம் : திமுகவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆலமரம் போன்றது எனக் கூறியிருந்தார். இது குறித்த கேள்விக்கு, அப்படி தான் தெலங்கானாவிலும், ஆந்திராவிலும் ஆலமரம் என்றார்கள். அங்கு ஆட்சி மாறி இருக்கிறது. ரஜினிகாந்த் திமுகவில் புயலையும், சுனாமியையும் உருவாக்கி இருக்கிறார்.

கட்சிக்கு கடுமையாக உழைத்த அமைச்சர் துரைமுருகன் இன்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கீழ் இருக்கிறார். அடுத்ததாக உதயநிதிக்கு கீழும் இருக்க வேண்டியுள்ளது . இதனால்தான் வாரிசு அரசியலை நாங்கள் வேண்டாம் என்கிறோம். உதயநிதி ஸ்டாலின் துரைமுருகனின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சொல்லி இருக்கிறார். அப்போ ரஜினிகாந்தின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா? குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

சீனியர்கள் பலரிடம் இருந்த பொறுப்புகள் தற்போது மற்றவர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. திமுக தொண்டர்கள் இதனை சிந்திக்க வேண்டும். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மூத்தவர்களுக்கு பாஜகவில் அதிகம் மரியாதை கிடைக்கும். அதனால் உறுப்பினராக பாஜகவில் சேர்ந்து கொள்ளுங்கள்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டிற்கு முன் நின்று திமுகவை விமர்சனம் செய்யும் அளவிற்கு பாரதத்தில் ஜனநாயகம் இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களின் நம்பிக்கையை மதிக்கும் அளவிற்கு நாட்டு மக்களின் நம்பிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிக்கவில்லை" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : "நாங்க நண்பர்கள்; நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டாம்" - ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - rajini vs duraimurugan

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.