சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார அலுவலர், டாக்டர். குகானந்தம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சென்னை மாநகராட்சியில் மருத்துவ அலுவலர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தனியார் மருத்துவமனையில் கடைசி வரை மருத்துவராக பணிபுரிந்தவர். மருத்துவத்தை அயராத மக்கள் சேவையாகச் செய்தவர்.
மாநகராட்சியும் மருத்துவமும்: இவர் சென்னை மாநகராட்சியின் தொற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்தவர். இவர் சுகாதார அலுவலர் மருத்துவராக இருந்தபோது எளிய மக்களுக்காக இலவச சிகிச்சை அளித்த பெருமை வாய்ந்தவர். மேலும் சென்னையின் பெரும் மழைக் காலங்களில் பொதுமக்கள் மத்தியில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதில் தீவிரமாகச் செயல்பட்டவர்.
கோவிட் காலப் போராளி: தமிழகத்தில் கோவுட் பரவல் அதிகரித்திருந்த நிலையில் நோய்த் தொற்று குறித்துப் பல விழிப்புணர்வு செயல்களில் ஈடுப்பட்டவர். மேலும் கோவிட் நெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக அரசு அமைத்த சிறப்பு ஆய்வுக் குழுவில் முக்கியமான பணியாற்றியவர். இவர் டெங்குகாய்ச்சல் குறித்துப் பல ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு அதில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; மெத்தனாலை பதுக்கி விற்பனை செய்த கும்பல் கைது!