ETV Bharat / state

தேனி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய சிறைக்கைதி கைது; தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

Escaped prisoner arrested: போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கைதி தப்பியோடிய நிலையில், அவரை மீண்டும் கைது செய்யும்போது தற்கொலைக்கு முயன்றதால், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய சிறை கைதி கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 3:39 PM IST

தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர், சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கிய வழக்கில், கடந்த ஜன.30 ஆம் தேதி தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கம்பம் அருகே கூடலூர் பகுதியில் மற்றொரு வழக்கிற்காக சிறைத் தண்டனை பெற்ற கைதி விஜயகுமாரை, தேனி ஆயுதப்படை காவலர்கள் இருவர், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் இருந்து, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து, வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற பின், கைதி விஜயகுமாரை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்து, மாலையில் டீக்கடையில் கைதி மற்றும் காவலர்கள் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, விஜயகுமார் காவலர்களைத் தள்ளிவிட்டு, தப்பி ஓடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒளிந்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில், தப்பி ஓடிய சிறைக்கைதி விஜயகுமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ஒரு ஆய்வாளர், உதவி ஆய்வாளருடன் 10 காவலர்கள் என ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த எட்டு நாட்களாக பெரியகுளம் பகுதியான அகமலை, சொர்க்கம் வனப்பகுதி, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரள எல்லைப் பகுதிகளிலும் விஜயகுமாரை தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், விஜயகுமார் போடி அருகே உள்ள மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, தனிப்படை காவல்துறையினர் விஜயகுமாரைச் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்துள்ளனர். காவல்துறையினர் தன்னைச் சுற்றி வளைத்து பிடித்து விடுவார்கள் என்று அறிந்திருந்த விஜயகுமார், தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனால் விஜயகுமார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே தப்பி ஓடிய நிலையில், மீண்டும் அவர் தப்பி ஓடாமல் இருக்க, மருத்துவமனையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை குண்டு வெடிப்பு சம்பவம்; திருச்சியில் அஷ்ரப் அலி என்பவர் வீட்டில் என்ஐஏ சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.