ஈரோடு: தமிழகத்தில் மலைக்கிராமங்களில் பணியாற்றும் அரசுத்துறை ஊழியர்களுக்கு மலைப்படி, குளிர்காலபடி போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள், வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறை ஊழியர்கள் இந்த மலைப்படி சலுகைகள் வழங்கப்படுவதில்லை.
இதனால் தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் மலைக்கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு 30 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அரசுக்கு இதுகுறித்து கோரிக்கை மனுக்களையும் அளித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் அரசுத் துறை ஊழியர்களுக்கு மலைப்படியாக குறைந்தபட்சம் ரூ.1500 முதல் ரூ.6000 ஆயிரமும். குளிர்காலப்படி நவம்பர் முதல் பிப்ரவரி வரை மாதந்தோறும் ரூ. 1500 வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் யானை தாக்குதல் சம்பவம் எதிரொலி: நெல்லை காந்திமதி யானையை சந்திக்க பக்தர்களுக்கு கட்டுப்பாடு!
இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து கடம்பூர் மலைக்கிராமத்தின் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சரத் அருள்மாறன் கூறுகையில், “தமிழக அரிசின் உத்தரவு காரணமாக குறைந்தபட்சமாக ரூ.1500 முதல் ரூ.6000 வரை மலைப்படியும் குளிர்கால்ப்படியாக 4 மாதங்களுக்கு ரூ.1500 கிடைப்பதால் வனவிலங்குகள் அச்சுறுத்தும் பாதுகாப்பற்ற மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அரசு பணியாளர்கள், மழை, வெயில், விலங்குகள் தாக்குதல் இன்றி பாதுகாப்பான வாடகை வாகன பயணம் மூலம் பள்ளிக்கு சென்று வருவதற்கு உதவியாக உள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூரில் 2 ஆயிரம் பேர் பயனடைவார்கள்” என்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்