ETV Bharat / state

எண்ணூர் அனல் மின்நிலைய டெண்டர் முறைகேடு.. தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ennore power plant: எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras high court
madras high court
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 10:08 PM IST

சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கும் செய்யும் திட்டத்தில், 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட கூடுதல் அலகை அமைப்பதற்காகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோ கடந்த 2019ஆம் ஆண்டில் டெண்டர் கோரியது.

பிஜிஆர் நிறுவனத்திற்கு ஒதுக்கிய டெண்டரை ரத்து செய்து 2021 ஏப்ரல் 23ஆம் தேதி டான்ஜெட்கோ உத்தரவிட்டது. பின்னர் அதே டெண்ரை 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிஜிஆர் நிறுவனத்திற்கே ஒதுக்கியது. இதில் முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்தியத் தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி திருச்சி, திருமயம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பெல் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி D.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பி.ஜி.ஆர். எனர்ஜி என்பது பினாமி நிறுவனம் அல்ல என்றும், பல திட்டங்களை இந்த நிறுவனம் செயல்படுத்தி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஒப்பந்தம் வழங்கியதற்கான காரணங்களைத் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும், சிபிஐ விசாரணை கோரிய இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதிட்டார். மனுதாரர் தரப்பில் பிஜிஆர் எனர்ஜிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டிருப்பதாகவும், முந்தைய ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம் புதுப்பித்ததற்கான காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், டான்ஜெட்கோ-வுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: "காடு என்றால் காடுதான்"-கொட்டு வைத்த உச்சநீதிமன்றம்: 1996ல் நீலகிரி வழக்கில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.