ETV Bharat / state

இந்து முறைப்படி நடந்த இங்கிலாந்து முதியவரின் இறுதி சடங்கு.. திருவண்ணாமலையை சுற்றிவந்த காளி பாபா யார்? - ENGLAND MAN DIED IN TIRUVANNAMALAI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 2:08 PM IST

ENGLAND MAN DIED IN TIRUVANNAMALAI: திருவண்ணாமலையில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த லண்டனைச் சேர்ந்த முதியவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்து முறைப்படி நடந்த காளி பாபாவின் இறுதி சடங்கு
இந்து முறைப்படி நடந்த காளி பாபாவின் இறுதி சடங்கு (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி உலகளவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

காளி பாபாவின் இறுதி சடங்கு காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வகையில், அருணாசலேஸ்வரர் கோயில் மற்றும் ரமணரின் மீதுள்ள ஈர்ப்பால் இங்கிலாந்தை சேர்ந்த கிளாவ்பிரட்ரிக் நியூமேன் என்பவர் அவரது 45 வயதில் திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளார். பின்னர், அவருக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் ஏற்படவே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக திருவண்ணாமலையிலேயே தங்கி வசித்து வந்துள்ளார்.

காவி உடை அணிந்து தினமும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதை ஆன்மீக தவமாக செய்து வந்த இவரை 'காளி பாபா' என்று பலரும் அழைத்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் திருவண்ணாமலையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதையிடையே அவருக்கு உடல்நலம் மோசமடைந்த நிலையில், ஜுலை 15 ஆம் தேதி (நேற்று முன்தினம்) காளி பாபா உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் மூலம் இங்கிலாந்து தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த காளி பாபா உடலுக்கு உறவினர்கள் யாரும் உரிமை கோராத நிலையில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் அவரது உடலை நல்லடக்கம் செய்வது குறித்து திருவண்ணாமலையை சேர்ந்த சமூக சேகவர் மணிமாறனுக்கு தகவல் தெரிவித்தனர். மணிமாறன் தமிழ்நாடு முழுவதும் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சாதுக்கள், தொழுநோயாளிகள் போன்றோர்களின் உடல்களை கடந்த 22 வருடமாக நல்லடக்கம் செய்து வருகின்றார்.

இதுவரை 2 ஆயிரத்து 856 பேரின் உடல்களை நல்லடக்கம் செய்து சேவை செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று போலீசார் பார்வையில் மணிமாறன் தனது சொந்த செலவில் திருவண்ணாமலை ஈசான்ய மின் மயானத்தில் காளி பாபாவின் உடலுக்கு இந்து முறைப்படி தகனம் செய்தார். அப்போது காளி பாபாவின் உடலுக்கு திருவண்ணாமலையில் தங்கியுள்ள லண்டனை சேர்ந்த லிசா, ஹெதர், அமெரிக்காவை சேர்ந்த சந்திகுமார், கவுரவ் சுதன் மற்றும் போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: சமயபுரம் கோயிலுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலி! - Thanjavur Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.