கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து சுமார் 50 யானைகள் தளி வனப்பகுதி வழியாக ஜவ்ளகிரி வனசாரகத்திற்கு வந்த நிலையில் அதில் 60க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளுக்குள் சென்ற நிலையில் இருபது யானைகள் நொகனூர் வனப்பகுதிகளில் குட்டிகளுடன் முகாமிட்டது.
அதனை தொடர்ந்து பூதுக்கோட்டை, சந்தனம் பள்ளி, கல்சூர், குருப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்தும் விவசாய நிலங்களுக்குள் அட்டகாசம் செய்து வந்தது. குறிப்பாக விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள ராகி, நெல், பீன்ஸ் , முட்டைகோஸ் போன்ற தோட்டங்களைச் சேதப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: வெம்பக்கோட்டை அகழாய்வில் விளையாட்டுப் பொருட்கள் கண்டெடுப்பு - ஆய்வாளர் கூறுவதென்ன?
இதனால் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.மேலும் யானைக் கூட்டத்தை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிகாலை ஊடே துர்க்கம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 10 க்கும்மேற்பட்ட யானைக் கூட்டங்கள் ஓசூர் வனப் பகுதியான சாணமாவு வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது . இதன் காரணமாக சினிகிரிப் பள்ளி, கொம்பே பள்ளி பகுதி விவசாயிகள் தங்கள் தோட்டத்திற்கு செல்லும்போது பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.