ETV Bharat / state

கர்நாடகா அரசுப் பேருந்தில் சிக்கிய ரூ.35 லட்சம்.. தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி! - money seized from Karnataka bus - MONEY SEIZED FROM KARNATAKA BUS

Unaccounted money seized: கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கர்நாடகா அரசுப் பேருந்தில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
கர்நாடகா அரசு பஸ்சில் கொண்டுவரப்பட்ட ரூ.35 லட்சம் பணம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 4:40 PM IST

கர்நாடகா அரசு பஸ்சில் கொண்டுவரப்பட்ட ரூ.35 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

ஈரோடு: நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதல், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

அந்த வகையில், தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கவும், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையிலும், தொகுதி வாரியாக பறக்கும் படை பணியமர்த்தப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க ஆங்காங்கே வாகனத் தணிக்கையிலும் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்களிடமிருந்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கர்நாடக அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ஒரு நபர் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து பணம் கொண்டு வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் கர்நாடக மாநிலம் தாவண்கெரே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (24) எனவும், கோவையில் மனையிடம் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர் பணம் கொண்டு வந்ததற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர், கணக்கில் வராத ரூ.35 லட்சம் பணம் ஈரோடு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பறக்கும் படை சோதனைகள் தீவிரம்..! குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ.9 லட்சத்துக்கு மேல் பறிமுதல்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.