ETV Bharat / state

வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள்... அரசுக்குத் தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Satyabrata Sahoo: நாடாளுமன்றத் தேர்தலின்போது, அனைத்து வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து, அரசுக்குத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

Satyabrata Sahoo
சத்யபிரதா சாகு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 4:15 PM IST

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காகத் தமிழகம் முழுவதும் 68,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அரசுக்குத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அனைத்து அரசுச் செயலாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது, இந்தியத் தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உதவியாளர் மேஜை, குடிநீர், கழிவறை, சாய்தளம், மின்சார இணைப்பு வசதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் போன்றவை செய்து தரப்பட வேண்டும்.

15X15 அடி அளவில் துணிப் பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதிகள் செய்து தரப்படவேண்டும். குறிப்பாக, குழந்தைகளை அழைத்து வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், பெண்களுக்கு இந்த வசதி அவசியம் அளிக்கப்பட வேண்டும்.

கடந்த பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி தயார் செய்யும் பணிக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ரூ.1,300 வீதம் வழங்கப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தப் பணிகளை மேற்கொண்டனர். இந்தமுறையும் இந்த தொகையைக் கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு எண் அளித்தல், 200 மீட்டர் எல்லைக்கோடு வரைதல், வாக்குச்சாவடிக்குள் தடுப்புகளை அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். பந்தல் மற்றும் சாமியானா போடுவதற்கான செலவு வேறு கணக்கிலிருந்து வழங்கப்படும்” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உபா, பணமோசடி தடுப்பு சட்டங்கள் ரத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு! - CPIM Lok Sabha Poll Manifesto

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.