சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது எனவும் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பொது சின்னத்தில் மட்டுமே போட்டியிட முடியும் என தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் வாயிலாக மதிமுக வழக்கறிஞர்களுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
இதனிடையே, மதிமுக தனி சின்னத்தில் மட்டுமே தேர்தலில் களம் காணும் என உறுதிபட தெரிவித்துள்ள மதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ, பம்பரம் சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.