ETV Bharat / state

சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய ஜானகி போல் செய்ய வேண்டும்: கோவையில் ஈபிஎஸ் கூறியது என்ன? - EPS VS Sasikala

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 1:56 PM IST

EPS VS Sasikala: மத்திய அரசு திட்டத்தை தமிழகத்தற்கு கொண்டு வராமல், அண்ணாமலை வாயில் வடை சுட்டு வருகிறார் எனவும், அதிமுகவில் சசிகலா இணைய வேண்டும் என நினைத்தால் ஜானகி அறிக்கை விட்டது போல அறிக்கை விட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, சசிகலா
எடப்பாடி பழனிசாமி, சசிகலா (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,“பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளது. இருந்தும் அதிமுகவை திட்டமிட்டு குறை சொல்லி அண்ணாமலை பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த தேர்தலில் அதிமுக போட்டிக்கு வந்தால் 3 அல்லது 4 ஆம் இடம் தான் வந்திருக்கும் என அவர் கூறியுள்ளார். மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி, அவரது கணிப்பு அப்படி உள்ளது.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்கு மட்டுமே குறைவாக பெற்றுள்ளார். 2ம் இடத்தில் அதிமுக தான் உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படி நடந்துகொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆடு மாடு போல் மக்களை பட்டியில் அடைத்து பரிசு, பணம் கொடுத்து தேர்தலை சந்திதனர்.

அப்போது அண்ணாமலை எங்கள் கூட்டணியில் தான் இருந்தார். அவருக்கும் இது நன்றாகத் தெரியும். இருந்தும் அதிமுக நிலைபாடு குறித்து இப்படி சொல்வது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அது உண்மை அல்ல. இந்த தேர்தலில் கோவையில் அண்ணாமலை போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் திமுக வை விட குறைவாக பெற்றுள்ளார். பின் எப்படி வளர்ந்துள்ளது என கூற முடியும்.

தினம்தோறும் பேட்டிகளில் மற்ற கட்சிகளை பற்றியே பேசி வருகிறார். எந்த மத்திய அரசு திட்டத்தையும் தமிழகத்தற்கு கொண்டு வராமல், வாயில் வடை சுட்டு வருகிறார். 100 நாளில் 500 வாக்குறிதிகள் என பொய் சொல்லி தான் வாக்கு பெற்றுள்ளார். உண்மையை சொல்லி வாக்கு பெறவில்லை. இதுபோன்ற தலைவரால் தான், 300க்கும் மேற்பட்ட தொகுதியை பெற்ற பாஜக, இப்போது சறுக்கி கூட்டணியில் ஆட்சியில் இருப்பதற்கு காரணம்”
என்றார்.

அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், இது கார்ப்பரேட் கம்பெனி கிடையாது, விலகியவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு. மேலும், சசிகலா அதிமுகவின் உறுப்பினரே இல்லை. அவர் எப்படி கட்சியை ஒன்றிணைக்க முடியும். அதிமுக பிரிந்த போது ஜானகி அவர்கள் வெளியிட்ட அறிக்கையை போல, கட்சி தலைமைக்கு உடன்பட்டு செயல்படுவேன் என சசிகலா கூற வேண்டும் என்றார்

ஆர்.எஸ்.பாரதி குறித்து பேசியவர், கல்வி செல்வத்தை கொச்சை படுத்தி அவர் பேசியுள்ளார். அது கண்டிக்கத்தக்கது. அண்மை காலமாக வயது முதிர்வு காரணமாக அவர் இப்படி பேசி வருகிறார். இதனை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

இதையும் படிங்க: 'நீட் தேர்வு வரக் காரணம் சங்கல்ப் இயக்கமும், பாஜகவும் தான்' - செல்வப்பெருந்தகை - Selvaperunthagai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.