ETV Bharat / state

“நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு கிடைக்கும்” - ஓ.பன்னீர்செல்வம் - pudukottai

OPS vs EPS: தாங்கள் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும், கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

விராச்சிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 8:03 PM IST

விராச்சிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

புதுக்கோட்டை: விராச்சிலையில் நடைபெற்ற நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.01) புதுக்கோட்டைக்கு வருகை புரிந்தார். திருமண நிகழ்ச்சிக்குப் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கின்றனர். பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்று, நாட்டிற்கு சுபிட்சம் வரக்கூடிய முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும். ஈரோடு இடைத்தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலைச் சின்னம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம். நாங்கள் அதிலிருந்து வெளியே வரவில்லை, கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

ஏற்கனவே நாங்கள் கூறியபடி, தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். சசிகாலாவுடன் சந்திப்பது குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்ய வேண்டும். நான் திமுகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளதாக கூறுபவர்கள் முட்டாள்.

அதிமுக ஆட்சியில்தான் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில்தான் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் எந்த விதமான மக்கள் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

நான் எப்போதும் பொறுமையாகவே இருப்பவன், இனியும் பொறுமையாகவே இருப்பேன். அது என் சுபாவம். துரோகத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடு எடப்பாடி பழனிசாமி. அவர் தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கு செய்தது பெரிய துரோகம். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், அவர் எவ்வளவு முதலீட்டைக் கொண்டு வருகிறார் என்பதை பொறுத்துதான் அதன் பயன் இருக்கும்.

நிர்வாகிகளும் சரி, தொண்டர்களும் சரி அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால், ஒன்று சேரக்கூடாது என்று கூறும் ஒரே நபர் எடப்பாடிதான். அதிமுக ஆட்சியில்தான் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் எந்த விதமான மக்கள் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. துரோகத்தின் வெளிப்பாடாக என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள். நான் என்ன துரோகம் செய்தேன் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: “சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.