ETV Bharat / state

“அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவரின் வாக்கு சதவீதம் என்ன?” - ஓபிஎஸ்-ஐ சாடிய ஈபிஎஸ்! - OPS VS EPS

OPS VS EPS: அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் என்ன வாக்கு சதவீதம் பெற்றுள்ளனர் எனவும், அவர்கள் பிரிந்து போன பிறகு அதிமுகவிற்கு ஒரு சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளது எனவும், இதிலிருந்து கட்சி பலமாக உள்ளது என தெரிகிறது என ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

OPS, EPS IMAGE
OPS, EPS IMAGE (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 10:42 PM IST

கோயம்புத்தூர்: சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2019 தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட ஒரு சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 33.52 சதவீதம் பெற்றது. அதுவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 26.93 சதவீதம் பெற்றது. இதன் வித்தியாசம் 6.59 சதவீதம் ஆகும். அதாவது, திமுகவின் வாக்குகள் 6.59 சதவீதம் சரிந்துள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 18.80 சதவீதம் ஆகும். தற்போது பாஜக கூட்டணி 18.28 சதவீதம் பெற்றுள்ளது. இதுவும், 0.2 சதவீத சரிவாகும்.

உண்மையில், அதிமுக இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் 1 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் அமைச்சர் சகாக்கள் அந்தந்த தொகுதிகளில் முகாமிட்டு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு வகையில் தேர்தலை முழு பலத்துடன் பயன்படுத்தினர்.

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெறும். தேசியக் கட்சிகளோடு கூட்டணி வைத்து தான் திமுக இந்த தேர்தலைச் சந்தித்தது. தனியாக நின்றிருந்தால் இந்த வாக்குகளைப் பெற்றிருக்க இயலாது. இந்த தேர்தலில் மத்தியில் பாஜகவா, இந்தியா கூட்டணியா என்ற போட்டி தான் இருந்தது. மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் பாஜகவால் எதுவும் சொல்ல முடியவில்லை. இதுவே தேசிய கட்சிகளின் நிலை. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அதிமுக தான் செயல்படுகிறது.

குவைத் தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 50 பேர், அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கான உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும்.

அதிமுக ஒருங்கிணைப்பு குழு: அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் என்ன வாக்கு சதவீதம் பெற்றுள்ளனர்? அவர்கள் பிரிந்து போன பிறகு அதிமுகவிற்கு ஒரு சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளது. இதிலிருந்து கட்சி பலமாக உள்ளது என தெரிகிறது” என்றார். அதிமுக ஒருங்கிணைப்பு குழு குறித்த கேள்விக்கு, ரோட்டில் செல்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை. சாலையில் செல்பவர்கள் எல்லாம் குழு அமைக்கிறார்கள். அப்படி கூறுபவர்கள் யார்? கட்சியிலேயே அவர் கிடையாது. அவரை பெரிய ஆள் என்று நினைத்து கேள்வி கேட்கிறீர்கள். அவரது கருத்தை தமிழகத்தின் கருத்து போல எடுத்துக் கொள்கிறீர்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “அமித்ஷா அழைத்து அறிவுரை கூறினார்..” யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழிசை செளந்தரராஜன்! - Tamilisai Amit Shah Conversation

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.