ETV Bharat / state

பேண்ட் பாக்கெட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்.. கொட்டாரம் சார்பதிவாளர் கைது! - Kanyakumari Sub registrar arrest - KANYAKUMARI SUB REGISTRAR ARREST

Vigilance police raid: கன்னியாகுமரி, கொட்டாரம் பதிவுத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் பொறுப்பு சார்பதிவாளரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சார்பதிவாளர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம்
சார்பதிவாளர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 2:57 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலங்களில் போக்குவரத்துத் துறை அலுவலகம், பத்திர பதிவுத்துறை அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதல் செய்து உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக 32 வயதான அப்ரோஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு வருபவர்களிடம் சிறு பணிகள் செய்வதாக இருந்தாலும் லஞ்சம் கேட்பதாகவும், வேறு ஆட்களை வைத்து பணம் வசூல் செய்வதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார், நேற்று இரவு திடீரென பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அந்த நேரம் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு புறப்படத் தயாராக இருந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில் பொறுப்பில் இருக்கும் சார்பதிவாளர் அப்ரோசை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையில், அப்ரோசின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த 1 லட்சத்து 3,500 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என அதிகாரிகள் கேட்ட போது, அவர் எந்த பதிலும் கூறாமல் இருந்து உள்ளார். அந்த பணத்திற்கான கணக்கும் அவர் தெரிவிக்கவில்லை.

இதனை அடுத்து, கணக்கில் வராத அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல, அலுவலக உதவியாளர் மோகன் பாபு என்பவரிடம் இருந்து 1,100 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

இதனையடுத்து, அப்ரோஸ் மற்றும் மோகன்பாபு ஆகிய இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் நேற்று இரவு முழுவதும் சோதனை நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: '1000 ரூபாய்க்கு 1 கிராம் தங்கமாம்'.. சதுரங்க வேட்டையில் சிக்கிய பொதுமக்கள்.. கோடிகளை சுருட்டிய மோசடி பெண் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.