ETV Bharat / state

மருத்துவரை ஏழு இடங்களில் கத்தியால் குத்திய இளைஞர்.. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பயங்கரம்! - DUTY DOCTOR STABBED

சென்னை கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சைத் துறையின் பேராசிரியர் பாலாஜியை, நோயாளி ஒருவரின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகம், தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகம், தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி (ETVBharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2024, 12:22 PM IST

சென்னை: கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்று காலை மருத்துவமனையில் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி என்பவர் பணியில் இருந்த நேரத்தில், அவரிடம் சிகிச்சைக்கு வருவது போல் வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகத் தாக்கினார்.

இதனைக் கண்ட பொதுமக்களும், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

அரசு புற்றுநோய் மருத்துவர் பாலாஜி
அரசு புற்றுநோய் மருத்துவர் பாலாஜி (ETV Bharat Tamil Nadu)

இச்சம்பவம் குறித்து கிண்டி காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி காவல்துறையினர், மருத்துவரை கத்தியால் குத்திய நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் கிடந்த மருத்துவரை குத்தியை கத்தியையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞருடன் இன்னொருவர் இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது அந்த நபரையும் காவல்துறை கைதுசெய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் தான் மருத்துவரைக் கத்தியால் குத்தியவர் என்பது தெரியவந்துள்ளது.

இவரது தாயார் கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் சில காலமாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரனும் அவருடன் வந்த ஒரு நபரும் மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

அப்போது மருத்துவர் பாலாஜி அந்த நபர்களிடம் அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரை குத்தியதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏழு இடங்களில் கத்திக்குத்து: மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் மருத்துவர் பாலாஜிக்கு ஏழு இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளதாக கிண்டி அரசு பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுந்போது, " மருத்துவர் பாலாஜிக்கு கழுத்து, காதுக்கு பின்புறம், நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார்; நலமாக உள்ளார்.8 மணி நேரத்திற்கு பிறகு மருத்துவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும்" என்று பார்த்தசாரதி கூறினார்.

முதலமைச்சர் கண்டனம்:இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.”

“இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்”.

“அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்,” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க
  1. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
  2. போதைப்பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட டிவி சீரியல் மீனா வழக்கில் மேலும் இருவர் கைது!
  3. சென்னையில் பயங்கரம்..முன்விரோத காரணமாக பெண் வெட்டி படுகொலை!

சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம் என்ன?

சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் (ETV Bharat Tamil Nadu)

இது தொடர்பாக தகவல் வெளியிட்டிருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது தாய் பிரேமா 6 மாதமாக இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு நோய் முற்றிய நிலையில்தான் அவரது தாய் அனுமதிக்கப்பட்டார். சிறந்த சிகிச்சை அளித்தோம். ஆனால் அவர்களாகவே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிரேமா. தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஸ்வரன் ஏற்கனவே இந்த மருத்துவமனையில் உதவியாளராக இருந்ததால், எப்போதும் போல மருத்துவமனைக்கு வருவது போல வந்து பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து மருத்துவரை தாக்கியுள்ளார்,” என குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.