ETV Bharat / state

"விரக்தியில் பாஜக தலைவர்கள் சாதி மதங்களை வைத்து பிரச்சாரம் செய்கின்றனர்” - துரை வைகோ தாக்கு! - Durai Vaiko - DURAI VAIKO

Trichy MDMK Lok Sabha candidate Durai Vaiko: “நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தோல்வி உறுதியாகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் தோல்விக்கான காரணங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

MDMK CHIEF SECRETARY DURAI VAIKO
MDMK CHIEF SECRETARY DURAI VAIKO (Photo Credit to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 4:30 PM IST

மதிமுக துரை வைகோ பேட்டி (Credits to ETV Bharat Tamil Nadu)

திருச்சி: திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்திற்குச் சென்ற திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அங்கு உள்ள சிசிடிவி காட்சிகள் முறையாக இயங்குகிறதா என்பதை பார்வையிட்டார்.

தொடர்ந்து அங்கு பணியில் இருக்கும் மதிமுகவினரிடம் கலந்துரையாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, "திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் எந்த குறையும் இல்லை, சிசிடிவிகளும் சரியாக இயங்குகிறது. போலீசாரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமருக்கு உள்ளான தகுதியோடு மோடியின் செயல்பாடுகளும், பேச்சும் இருக்க வேண்டும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி பிரிவினையைத் தூண்டும் வகையிலும், சாதி, மதங்களை வைத்து வாக்கு சேகரிக்கும் வகையிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதுவரை எந்த இந்தியப் பிரதமரும் இது போல் பிரச்சாரம் செய்ததில்லை.

சாதி மதங்களை வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது என விதிமுறைகள் இருக்கும் பொழுதும், அவர் தொடர்ந்து அவ்வாறு பிரச்சாரம் செய்து வருகிறார். இது குறித்து எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீது எந்தவித நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. பொதுவாக பாஜக கட்சிக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி இது போல் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் இதுவரை கூறவில்லை. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகத்தான் செயல்படுகிறது என தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம். அதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

தென்னக ரயில்வேயில் பணியாற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எந்த மாநிலத்தில் பணியாற்றுகிறார்களோ, அந்த மாநிலத்தின் மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அது வரவேற்கத்தக்கது தான். ஆனால், மத்திய அரசின் துறைகளில் தமிழ்நாட்டில் அதிக அளவு வட மாநிலத்தவர் தான் பணியாற்றுகிறார்கள்.

அது தவறு கிடையாது, ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு மத்திய அரசின் வேலைகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வடமாநில மக்களைத் தமிழ்நாட்டில் திணிப்பதாகத் தான் இது உள்ளது. வடமாநிலத்தவர் தமிழை கற்றுக் கொள்வதை விட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்தியா கூட்டணிக்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. அதன் காரணமாகத்தான் விரத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவின் தலைவர்கள் சாதி மதங்களை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். பொய்களை பரப்புகிறார்கள்.

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளைத் திரித்து தவறான பிரச்சாரங்களை பாஜகவினர் செய்து வருகிறார்கள். பாஜகவிற்கு தோல்வி உறுதியாகிவிட்டது. தோல்விக்கான காரணங்களை அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது நீதிக்கு கிடைத்த வெற்றி, இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி.

டெல்லி மக்கள் அவரை மிகச் சிறப்பாக வரவேற்றுள்ளனர். அந்த வரவேற்பு பாஜக அரசைக் கண்டிக்கும் விதமாகத் தான் இருந்துள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்து மிகவும் வீரியத்துடன் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இது இந்தியா கூட்டணிக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் எழுச்சியைத் தான் தந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பவானி ஆற்றில் மிதந்த உடல்.. மீட்கச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! - MAN DOING YOGASANAM IN WATER

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.