ETV Bharat / state

நாளை மறுநாள் வாக்குப்பதிவு.. தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் வாகன சோதனை தீவிரம்! - Lok Sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 10:09 PM IST

Vehicle inspection at Karapallam check post: மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் பறக்கும் படையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் தீவிர வாகனத் தணிக்கை
தமிழகம் கர்நாடக எல்லையில் தீவிர வாகனத் தணிக்கை

ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மக்களவைத் தொகுதி விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதால், கர்நாடகத்தில் இருந்து வாக்காளர்களுக்கு ஏதும் பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

மாநிலத்தில் நாளை மறுநாள் (ஏப்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலின்போது மக்கள் அச்சமின்றி வாக்கு செலுத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இரு மாநில எல்லைப் பகுதியான காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் இன்று தீவிர வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது.

வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக கர்நாடகத்தில் இருந்து பணம் கொண்டு வரப்படாலம் என்பதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் பணம் ரொக்கமாக பேருந்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, பணம் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தும் விதமாக இரு மாநில எல்லைப் பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா, பாஜக சார்பில் எல்.முருகன், அதிமுக சார்பில் யோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் போட்டியிடும் நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதி விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதால், தேர்தல் ஆணையம் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் மட்டுமின்றி, பரிசுப் பொருள் கொண்டு செல்வதை தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், காரில் செல்பவர்களின் பெயர், செல்லும் இடம் உள்ளிட்டவை குறித்த முழுமையான விசாரணைக்குப் பின் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலாப் பேருந்துகள், சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு போலீசார் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ''பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு'' - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.