ETV Bharat / state

குண்டூசியை விழுங்கிய 14 வயது சிறுமி.. அறுவை சிகிச்சையின்றி அகற்றி மருத்துவர்கள் சாதனை! - Girl Swallowed Needle at Thanjavur - GIRL SWALLOWED NEEDLE AT THANJAVUR

A Girl Swallowed Needle at Thanjavur: தஞ்சாவூரில் 4 செ.மீ அளவுள்ள ஊசியை விழுங்கிய 14 வயது சிறுமியை, அறுவை சிகிச்சையின்றி 3.23 நிமிடத்தில் காப்பாற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிறுமியின் எக்ஸ்ரே மற்றும் மருத்துவர்களின் புகைப்படம்
சிறுமியின் எக்ஸ்ரே மற்றும் மருத்துவர்களின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 3:55 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், நேற்று (மே 27) ஆடை அணியும் போது தவறுதலாக ஊசியை (குண்டூசி பின்) விழுங்கியுள்ளார். அதனால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அச்சிறுமியின் பெற்றோர், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு (ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்) அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமி விழுங்கிய ஊசியின் படம்
சிறுமி விழுங்கிய ஊசியின் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

அங்கு, சிறுமியை பரிசோதனை செய்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அருண், உடையில் குத்தப்படும் குண்டூசி சிறுமியின் நுரையீரலில் சிக்கி இருப்பதைக் கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த 4 சென்டி மீட்டர் அளவுள்ள ஊசியை, மருத்துவர் அருண் அவரது மருத்துவக் குழுவுடன் இணைந்து, ப்ரோன்கோஸ்கோபி (Bronchoscopy) என்னும் சிகிச்சையின் மூலம், எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் அகற்றியுள்ளனர்.

தற்போது, ஆபரேஷன் இல்லாமல் 3.23 நிமிடத்தில் நுரையீரலில் சிக்கிய ஊசியை அகற்றி, சிறுமியின் உயிரைக் காப்பாற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். மேலும், இந்த ஆபரேஷன் குழுவில் மருத்துவர்கள் வசந்தகுமார், செந்தில்குமார், மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: 41 வயதில் நோயில் சிக்கிய ஃபகத் ஃபாசில்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.