ETV Bharat / state

விரைவில் 1,251 மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 6:38 PM IST

Minister Ma Subramanian: 1,251 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 1 வார காலத்திற்குள் அறிவிப்பு வெளியிட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

appointment order to doctors
மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கும் நிகழ்ச்சி

சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் புதிதாக நியமிப்பதற்கு 1,021 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 2,915 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இன்று மட்டும் 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளோம்.

பொது சுகாதாரத் துறையின் கீழ் 1,251 காலியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 1 வார காலத்திற்குள் அறிவிப்பு வெளியிட உள்ளோம். இதில் கரோனா காலத்தில் பணி செய்த மருத்துவர்களுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

983 மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுற்றுள்ளது. இந்த நிலையில், மருந்தாளுநர்கள் சிலர் கரோனா காலத்தில் பணியாற்றியதற்காக தங்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதேபோல், 1,266 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், 2,781 கிராமப்புற சுகாதாரப் பணியாளர்கள் என 6,500க்கும் மேற்பட்ட பணி இடங்கள் காலியாக உள்ளது. அவற்றை நிரப்புவதற்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், மருத்துவர்கள் சங்கம் ஒவ்வொரு நியமனத்திற்கும் நீதிமன்றத்திற்குச் சென்று தடை பெற்று தாமதம் ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது அவை எல்லாம் அகற்றப்பட்டு விட்டன” என்றார்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழ்நாட்டில் 45 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் 20 சுகாதார மாவட்டங்களில் காலிப் பணி இடங்கள் அதிகமாக இருந்தது. இந்த நியமனங்கள் மூலம் அவை எல்லாம் சீர் செய்யப்படும். ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இரண்டரை ஆண்டுகளில் புதிதாக 800க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டிடங்கள் திறந்து வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் 2,500க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாடகை இடத்தில் செயல்பட்டு வருகின்றன. நிதி நிலைக்கு ஏற்ப அவற்றை விரைவாக புதிய மாற்று கட்டிடங்கள் அமைக்கப்படும்.

மருத்துவர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டதால், 11,215 மருத்துவர்கள் பயன் பெற்றுள்ளனர். மருத்துவக்கல்வி இயக்கம், பொது சுகாதாரத்துறை இயக்குநரகம், சித்தா, இயற்கை மருத்துவம் என மருத்துவத் துறையில் ஒப்பிக்கப்பட்ட பணியிடங்கள் 22,447 என உள்ளது.

அதில் இரண்டரை ஆண்டுகளில் பதவி உயர்வு மூலம் 4,700 பேருக்கு பயன் கிடைத்துள்ளது. மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வுக்கான அரசாணை 354 மற்றும் 293 ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்து பிரச்னை இருந்து வந்தது. அதற்கு மருத்துவர்களை அழைத்துப் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.