ETV Bharat / state

'2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும், கட்சியில் பிரச்சனை வெடிக்கும்' - ஜெயக்குமார் சூளுரை - D JAYAKUMAR

திமுகவின் மக்கள் விரோத போக்கையும், ஜனநாயக விரோத போக்கையும் மக்களிடையே எடுத்துச் சென்று எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக மாவட்டக் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
அதிமுக மாவட்டக் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 3:50 PM IST

Updated : Nov 6, 2024, 9:53 PM IST

சென்னை: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்போது, அக்கட்சியில் உள்ள பிரச்சனைகள் வெடிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் பிற அணி செயலாளர் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

பிரச்சாரம்: பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றியதை மக்களிடையே எடுத்து சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்டக் கழக செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

ஜெயக்குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

இதையும் படிங்க: ஆன்லைனில் மருந்து டெலிவரியா..? தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு..!

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், '' டிவியில் தினந்தோறும் தங்கம் விலை நிலவரத்தை பற்றி பார்ப்பது போல, தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றிய செய்திகள் தான் ஒளிபரப்பு ஆக்கப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு தினந்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

மேலும், ''தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கருணாநிதியின் புகழ் பாடுவதையும், உதயநிதி ஸ்டாலின் புகழ் பாடுவதையும் அன்றாட நிகழ்வுகளாக வைத்துக் கொண்டிருக்கிறாரே தவிர, விலைவாசியை கட்டுப்படுத்துவதையோ, மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலோ கவனம் செலுத்துவதில்லை'' என்று விமர்சித்தார்.

தொடர்ந்து, '' எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசின் மக்கள் விரோத போக்கையும், ஜனநாயக விரோத போக்கையும் மக்களிடையே எடுத்துச் சென்று, சட்டமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும்'' என்றார்.

சீமான்: திமுகவின் கூட்டணி பலம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், '' 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்போது, அக்கட்சியில் உள்ள பிரச்சனைகள் வெடிக்கும் எனக்கூறியவர், சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா நீதிமன்றத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட வரலாற்றை சீமான் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறார். சட்ட வல்லுனர்களை வைத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு விவரங்களை சீமான் தெரிந்து கொள்வது நல்லது'' என்றார்.

மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையெல்லாம், முடக்குவதும், ஸ்டிக்கர் ஒட்டுவதையே ஸ்டாலின் அரசு குறிக்கோளாக வைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும் திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே தமிழத்தில் இருப்பதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

2026 தேர்தலின்போது திமுக படுதோல்வி அடைந்து கட்சி பிரச்சனை வெடிக்கும் என ஜெயக்குமார் கூறுவது, விசிக-வின் சமீப கால நடவடிக்கையை வைத்து பேசுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Nov 6, 2024, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.