ETV Bharat / state

"ஆளுநர் பேசியதற்கும் அசோக் நகர் பள்ளி சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது"- ஆர்.எஸ் பாரதி பகிரங்க குற்றச்சாட்டு! - RS Bharti on Ashok Nagar school - RS BHARTI ON ASHOK NAGAR SCHOOL

RS Bharti on Ashok Nagar School Incident: அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு திட்டமிட்ட செயல். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பள்ளிக் கல்வியின் தரம் குறித்து பேசியதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 6:42 PM IST

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஆர்.எஸ் பாரதி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறுகையில், “அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வை திட்டமிட்ட செயல். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பள்ளிகல்வியின் தரத்தை குறித்து பேசியதற்கும், இந்த நிகழ்வுக்கும் பின்னணி உள்ளது. அதனை அறிந்து புரிந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது போன்ற சில புல்லுருவிகள் வருவார்கள். இது போல் இனி நடைபெறாமல் அனைவரும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் இந்த பொறுப்பு உள்ளது. அரசின் கவனத்திற்கு வராமல் இது போல் செய்வது உண்டு.

இதுபோல் எங்கு நடந்தாலும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். கல்விதுறை அமைச்சரின் பேட்டியை பார்த்திருப்பீற்கள். இதை கருத்தில் கொண்டு பார்த்தால் இனி தமிழகத்தில் ஒருபோதும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என உறுதியாக நம்பலாம்.

அது ஒரு முட்டாள் தனமான நிகழ்வு. இது தன்னம்பிக்கை நிகழ்வு அல்ல. பகுத்தறிவு உள்ள எந்த மனிதரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாடு, கல்வியில் இந்தியாவில் முதல் இடம் பெற்றுள்ளதை ஜீரணிக்க முடியாமல் சில சக்திகள் இதனை கெடுக்க வேண்டும் என செயல்படுகிறார்கள். இது போன்ற மூட நம்பிக்கைகள், தவறான கருத்துகள் நுழைவதற்கு அனுமதிக்க மாட்டோம்.

கல்வி நிலையங்களில் ஆன்மீக குறித்து பேசக்கூடாது. அண்ணா முதலமைச்சராக இருந்த போது அரசு நிறுவனங்களில் எந்த படமும் இருக்க கூடாது என சட்டம் கொண்டுவந்தார். ஆன்மிகத்தை பேசுவதற்கு என தனியான தளங்கள் உள்ளன. கல்வி நிலையங்களில் ஒரு காலமும் அனுமதிக்க முடியாது” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: காகா..காகா.. மரத்தில் சிக்கிய காகத்தை பத்திரமாக மீட்ட தீயணைப்புப் படை வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.