ETV Bharat / state

"கூட்டம் கூடுவதை வைத்து சில நடிகர்கள் முதலமைச்சராக முயற்சி" - நடிகர் விஜயை சீண்டிய அமைச்சர் அன்பரசன்! - Anbarasan indirectly about vijay

Minister Tha.Mo.Anbarasan: கடந்த 10 ஆண்டுகள் திமுக எதிர்க்கட்சியாக தான் இருந்தது. இவ்வளவு பெரிய கட்சிக்கே இந்த நிலைமை இருக்கின்ற போதில், தற்போது தனக்கு கூட்டம் கூடுகிறது என்று நினைத்து சில நடிகர்கள் முதலமைச்சராகி விட நினைக்கிறார்கள் என விஜய்யை மறைமுகமாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சீண்டி உள்ளார்

அமைச்சர் அன்பரசன், விஜய்( கோப்புப் படம்)
அமைச்சர் அன்பரசன், விஜய்( கோப்புப் படம்) (Credits - Tha.Mo.Anbarasan and TVK IT Wing X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 5:07 PM IST

சென்னை: சென்னை அயப்பன்தாங்கலில் திமுகவின் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (ஆக.10) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அமைச்சர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "காஞ்சிபுரத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளிலேயே, அதிக வாக்குகளை கொடுத்து வெற்றி பெற வைத்தது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தான். இந்த தொகுதியில் எம்.பி டி.ஆர் பாலு நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அந்த அளவுக்கு இந்த தொகுதியில் இளைஞரணி மற்றும் மாணவர் அணியில் திறமையான உறுப்பினர்களை சேர்த்து உள்ளோம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் அதில் எனக்கு மகிழ்ச்சியே" என்று தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர், "திமுக இல்லாத ஒரு சந்து கூட தமிழ்நாட்டில் கிடையாது. அனைத்து இடங்களிலும் திமுகவின் தொண்டர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகள் திமுக எதிர்க்கட்சியாக தான் இருந்தது. இவ்வளவு பெரிய கட்சிக்கே இந்த நிலைமை இருக்கின்ற போதில், தற்போது தனக்கு கூட்டம் கூடுகிறது என்று நினைத்து சில நடிகர்கள் முதலமைச்சராகி விட நினைக்கிறார்கள்.

சினிமாவில் இருந்து ஒருவர் முதலமைச்சராவது எல்லாம் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு போய்விட்டது. இது தெரியாமல் எதிர்காலத்தில் முதலமைச்சர் கனவோடு இருப்பவர்களின் கனவுகளை எல்லாம் பொய்யாக்க வேண்டும் என்றால் நம் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்; மேயருக்கு எதிராக பனிப்போர் தொடங்கிய திமுக கவுன்சிலர்கள்! - kumbakonam Mayor Review Meeting

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.