ETV Bharat / state

ஓசூர் அருகே சொத்து தகராறில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை!

DMK Member murder: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான கார்த்திக் என்பவரை சொத்து தகராறில் பிரதாப் என்பவர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

Hosur
ஒசூர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 10:19 PM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த பேரிகை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (35). இவர் சூளகிரி திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருந்துள்ளார். பைனான்ஸ், ரியல் எஸ்டெட் செய்து வந்த கார்த்திக், திமுக ஒன்றிய செயலாளர் நாகேஷ் என்பவரின் அண்ணன் (பெரியம்மா மகன்) என்பதால், திமுகவில் முக்கிய புள்ளியாக வலம் வந்துள்ளார்.

இவருக்கும், கர்நாடகா மாநிலம் அனிகிரிப்பள்ளியைச் சேர்ந்த பிரதாப் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பேரிகை அடுத்த சூலகுண்டா என்னுமிடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக்கை, பிரதாப் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உயிருக்கு போராடிய கார்த்தியை அப்பகுதியினர் மீட்டு, ஒசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்ததாக தகவல் பரவிய நிலையில், ஒசூர் எம்.எல்.ஏ பிரகாஷ், ஒசூர் மேயர் சத்யா உள்ளிட்ட 200க்கும் அதிகமான திமுகவினர் தனியார் மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பரபரப்பான சூழல் காணப்பட்டது.

பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கார்த்தி உடலை உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியா-இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை விரைவில் கூட்ட வேண்டும் - மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.