ETV Bharat / state

திமுக வெற்றி பெற்றும் கூட பல தொகுதிகளில் கட்சி வளரவில்லை - துரைமுருகன் அப்செட்..! - duraimurugan - DURAIMURUGAN

உயிருள்ளவரை ராணிப்பேட்டை தொகுதி மக்களுக்கு நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் எனவும் கட்சி வளர கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

துரைமுருகன் புகைப்படம்
முக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேச்சு. (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 12:01 PM IST

காட்பாடி: ராணிப்பேட்டை மாவட்டம் அக்ராவரம் பகுதியில், காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட வாலாஜா மேற்கு ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது நிர்வாகிகளிடையே பேசிய அவர், இன்று திமுகவின் உயரிய பொறுப்பான பொதுச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்தாலும்கூட இந்த இடத்தில் என்னை அமரச் செய்தது ராணிப்பேட்டை தொகுதி தான். என்னை ஹீரோவாக்கியது இந்தத் தொகுதி தான் என்றார்.

மேலும், இந்த தொகுதி மக்களுக்கு என் உயிருள்ளவரை நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் என உணர்ச்சி வசப்பட்டு பேசியது நிர்வாகிகள் இடையே உருக்கமான சூழலை ஏற்படுத்தியது.

கட்சி வளர ஏற்பாடு:

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ்நாடு திமுக வெற்றி பெற்றாலும் கூட பல தொகுதிகளில் முறையாக கட்சி வளரவில்லை. குறிப்பாக, காட்பாடி தொகுதியில் உள்ள 20 பஞ்சாயத்துகளில், அடுத்த மாதம் முதல் தலா ஐந்து பஞ்சாயத்துகள் வீதம் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளதாகவும், அப்போது நமது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது புகார் எழும் பட்சத்தில் அவர்களை உடனடியாக நீக்கம் செய்வேன் எனவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெற நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:

  1. "குஜராத்து போய் பாருங்க, அப்போ தான் உலகத் தரம் என்னானு தெரியும்" - மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகன் ஆலோசனை!
  2. நேற்று கைது இன்று என்கவுண்டர்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் அதிரடி..!

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் வாயிலாக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.