ETV Bharat / state

நெல்லையில் திமுக பெண் கவுன்சிலர் திடீர் ராஜினாமா.. மேயருக்கு எதிராக அடுக்கும் குற்றச்சாட்டு!

DMK councillor: நெல்லையில் திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 2:36 PM IST

Etv Bharat
Etv Bharat
நெல்லையில் திமுக கவுன்சிலர் ராஜினாமா

நெல்லை: நெல்லையில் திமுக கவுன்சிலர் இன்று (மார்ச் 1) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் நெல்லை மாநகராட்சி ஆணையர் சுபம் தாக்கரே ஞானதேவ்ராவிடம் அளித்துள்ளார். இந்நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை அவர் மேயரிடம் தான் வழங்க வேண்டுமெனவும், தன்னிடம் வழங்கினால் அது செல்லாது எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகராட்சியில் ஏழாவது வார்டு கவுன்சிலர் ஆக இருந்தவர், இந்திராணி. இவர் தனது வார்டில் எந்த விதமான மக்கள் நலத்திட்டப்பணிகளும் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு காரணம், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தான் என அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

நெல்லை மாநகராட்சியில் ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்த சரவணன் மேயராக இருந்து வருகிறார் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் உள்கட்சி பூசல் காரணமாக மேயர் கவுன்சிலர்கள் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது மேயரை மாற்றக் கோரி ஆளுங்கட்சி கவுன்சிலர்களே அவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, மேயர் சரவணக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் அளவிற்கு பிரச்னை பெரிதானது.

பின்னர் திமுக தலைமை, அமைச்சர் தங்கம் தென்னரசுவை அனுப்பி கவுன்சிலர்களிடம் சமரச பேச்சுவார்த்தையை நடத்திய போதும், மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போராட்டம் தொடர் போராட்டம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் கூட மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் திமுக கவுன்சிலர்கள் ஒருவர் கூட கூட்டத்தில் பங்கேற்காததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், 7வது வார்டு கவுன்சிலர் இந்திரா மணி இன்று (மார்ச் 1) தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவை நேரில் சந்தித்து கவுன்சிலர் இந்திரா மணி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். முன்னதாக, மாநகராட்சியை கண்டித்து கவுன்சிலர் இந்திரா மணி மற்றும் அவரது கணவர் சுண்ணாம்பு மணி இருவரும் ஆணையர் அறையின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுன்சிலர் இந்திரா மணி, 'எனது வார்டில் எந்த மக்கள் பணியும் நடைபெறவில்லை. குறிப்பாக, பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். அதற்கு அடிக்கல் நாட்டியதோடு பணியைக் கிடப்பில் போட்டனர். அதேபோல், சாலைகள் அமைப்பது உட்பட எந்த ஒரு அடிப்படை பிரச்னைக்கும் நிதி ஒதுக்காமல் அலட்சியம் செய்கின்றனர். மேயரிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. எனக்கு வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அதனால், எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரின் கணவர் சுண்ணாம்பு மணி, 'நாங்களும் பலமுறை போராடிவிட்டோம். எந்த பணியும் எங்கள் வார்டில் நடைபெறவில்லை. எங்கள் வார்டு தொடர்பான ஆவணங்களை மட்டும் ஒழித்து வைக்கின்றனர். ஆளுங்கட்சியாக இருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். கேட்டால் கட்சியில் பிரச்னை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். எனவே, பொறுப்பு அமைச்சரிடம் கூறினால், அவரும் காதில் வாங்குவதாக இல்லை. மக்கள் எங்களை மன்னிக்க வேண்டும். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை; அதனால், ராஜினிமா செய்து விட்டார்' எனக் கூறினார்.

இந்த ராஜினாமா கடிதம் குறித்து ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் விளக்கம் கேட்டபோது, 'மாநகராட்சி விதிகளின்படி மேயர் தான் அவைத் தலைவர் ஆவார் எனவே கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், அதற்கான கடிதத்தை மேயரிடம்தான் வழங்க வேண்டும். எனவே, தற்போது இந்திரா மணி வழங்கி உள்ள ராஜினாமா கடிதம் செல்லாது. மேலும், அவரது வார்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார்.

அதேபோல், கவுன்சிலர் இந்திரா மணி வழங்கிய ராஜினாமா கடிதத்தில் அனுப்புறார் என்ற இடத்தில் தனது பெயரை குறிப்பிடாமல் தவறுதலாக மாநகராட்சி ஆணையர் பெயரை குறிப்பிட்டுள்ளார். அதாவது மாநகராட்சி ஆணையர் ராஜினாமா வழங்குவது போல் கடிதத்தை எழுதியுள்ளார். மேலும், கடிதத்தில் ராஜினாமா செய்வதற்கான எந்த ஒரு காரணத்தையும் குறிப்பிடாமல், வெறும் இரண்டே வரிகளில் முடித்துள்ளார். இதனால், உறுதியாக இந்த ராஜினாமா கடிதம் செல்லாது எனக் கூறப்படுகிறது. நெல்லை மாநகராட்சியில் ஆரம்பத்திலிருந்து மேயர் கவுன்சிலர் இடையே மோதல்0போக்கு நீடித்து வந்த சூழலில் பெண் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பதவியை தக்க வைத்த நெல்லை மேயர்; கடத்தப்பட்ட கவுன்சிலர்கள்? நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.