ETV Bharat / state

"வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை தான்!" மா.செ.க்களை எச்சரித்த மு.க.ஸ்டாலின் - mk stalin warns district secretary

MK Stalin warns district secretaries: மக்களவைத் தேர்தலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டுமென்று மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை தான்
வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை தான்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 1:59 PM IST

Updated : Mar 20, 2024, 4:16 PM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பேசுகையில், “நம்முடைய கூட்டணிக்கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள். அதனால் நட்புணர்வோடு கலந்து தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறோம். சில தொகுதிகளைப் பெற்று சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம். பலம் வாய்ந்த பெரிய கூட்டணியில் இது இயல்பானது.

தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம். நாட்டோட எதிர்காலம்தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளைக் கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு சாரும்.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அதற்கு அந்த மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு. ️தொகுதி மட்டுமில்லாமல் தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய – நகரம் - பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன்.

எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்பவே சொல்லி விடுறேன். இதை ரொம்ப கண்டிப்போடவும் சொல்கிறேன். எல்லா தொகுதியிலயும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: திமுகவில் 6 சிட்டிங் எம்பிக்களுக்கு கல்தா.. வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

தோழமைக் கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும். போஸ்டர்கள், துண்டறிக்கைகளில் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்களுக்கும் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும். வேட்பாளர் யாராக இருந்தாலும் அரவணைத்து மக்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.

️வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பதுதான் ரொம்ப முக்கியம்.மக்களை நேரடியா சந்திக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும். இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களளை தமிழ்நாட்டில் விதைக்கலாம் என்ற எண்ணமே, இனிமே பாசிச வெறிபிடித்த பா.ஜ.க.வுக்கு கனவிலேயும் வரக்கூடாது.

அப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை நாம் பெற வேண்டும்.புதுவை உட்பட 40 தொகுதிகள்லயும் நாம தான் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதி. ஜூன் 4-ஆம் தேதி வெற்றிச் செய்தியோட வந்து என்னைச் சந்தியுங்கள்” என்றார்.

இதையும் படிங்க: "ஆளுநர் டூ அக்கா" - மீண்டும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை செளந்தரராஜன்!

Last Updated : Mar 20, 2024, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.