ETV Bharat / state

மே 17 இயக்கத்தினரை டி-சர்ட்டை கழற்றச் சொன்ன போலீசார்? பாஜகவினர் உடன் கடும் வாக்குவாதம்.. கோவையில் நடந்தது என்ன? - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: கோவை நாடாளுமன்றத் தொதிக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்திக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 12:10 PM IST

Updated : Apr 10, 2024, 10:52 PM IST

மே 17 இயக்கத்தினரை டி-சர்ட்டை கழற்றச் சொன்ன போலீசார்? பாஜகவினர் உடன் கடும் வாக்குவாதம்.. கோவையில் நடந்தது என்ன?

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சிகளும் தங்களுக்குள் போட்டிப்போட்டுக் கொண்டு மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கோவை மாநகரின் ஒண்டிபுதூர் பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த திருமுருகன் காந்தி தலைமையிலான மே 17 இயக்கத்தினருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, அங்கு வந்த போலீசார், மே 17 இயக்கத்தினரை டி-சர்ட்டை கழற்றுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மேலும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தினேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நேற்றிரவு ஒண்டிபுதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் சில கருத்துகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டதாக தெரிய வருகிறது.

இதனிடையே, அப்போது அங்கு வந்த பாஜகவைச் சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமி தலைமையில் வந்த அக்கட்சியினர், மே 17 இயக்கத்தினரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதத்தின் போது, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை ஒருமையில் பேசியதாகவும், பாலாஜி உத்தம ராமசாமி அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, இருதரப்பினரும் மாறி மாறி தங்களுக்குள் கோஷங்களை எழுப்பி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் வந்த நிலையிலும் பாஜக தரப்பில், 'பாரத் மாதா கி ஜே' எனக் கோஷமிட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மே 17 இயக்கத்தினர் 'ஜெய்பீம்..பெரியார் வாழ்க..தமிழ்நாடு தமிழருக்கே..' என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் நடுவே, சமரசம் செய்ய வந்த போலீசார், மே 17 இயக்கத்தினர் அணிந்திருந்த டி-சர்ட்டுகளை கழற்றுமாறு வற்புறுத்தியதாகவும், அவர்கள் இதற்கு மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஐடி ரெய்டு எல்லாம் விசிக பயணத்தை தடை செய்ய முடியாது: திருமாவளவன் விளக்கம்! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 10, 2024, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.