ETV Bharat / state

ராமேஸ்வரம் டூ மெரினா; 604 கி.மீ. தொடர் நீச்சல் பயணம் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்! - Disabled Students Sea swimming

Sea swimming record:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் (SDAT) இணைந்து வேவ் ரைடர்ஸ் விளையாட்டுக் குழு நடத்தும் ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா வரை 604 கி.மீ தொடர் நீச்சல் பயணத்தை பங்கேற்றுள்ள 15 மாற்றுத் திறனாளி மாணவர்கள் இன்று தரங்கம்பாடி வந்தடைந்தனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள்
மாற்றுத்திறனாளி மாணவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 4:02 PM IST

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை செனாய் நகரில் உள்ள எஸ்டிஏடி உடன் இணைந்து வேவ் ரைடர்ஸ் விளையாட்டுக் குழு ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா வரை 604 கி.மீ தொடர் நீச்சல் பயணத்தை நடத்துகிறது. ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு 604 கி.மீ., கடல் வழியாக 15 மாற்றுத்திறன் மாணவர்கள் கடலில் நீச்சல் பயணம் செல்கின்றனர்.

தொடர் நீச்சல் பயணம் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் (Video Credit - ETV Bharat Tamilnadu)

உலக சாதனை முயற்சியாக நடத்தும் இந்த பயணத்தில் மாற்றுத்திறன் மாணவர்கள் ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீட்டர் தொடர் நீச்சல் பயணம் மேற்கொள்கின்றனர். ராமேஸ்வரத்தில் கடந்த 5ஆம் தேதி கடற்பயணத்தை தொடங்கிய இவர்கள், நாளொன்றுக்கு 50 கிமீ வரை என 12 மணி நேரம் பயணிக்கின்றனர்.

தொண்டி, காட்டுமாவடி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பழையாறு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, மரக்காணம், மகாபலிபுரம், ஈஞ்சம்பாக்கம் வழியாக 10 நாள் முடிவில் இவர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பகுதியில் தங்கள் சாதனையை நிறைவு செய்ய உள்ளனர். இந்த நிலையில், நேற்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை வந்தடைந்தனர்.

அங்கிருந்து இன்று காலை கடல்வழியாக பழையாறு நோக்கி புறப்பட்டனர். இந்த நீச்சல் பயணத்தில் 11 வயது மாணவர் சித்தார்த் மற்றும் முற்றிலும் பார்வைத்திறன் அற்ற மாணவர் லக்ஷய்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்த சாதனை வேர்ல்டு ரெக்கார்ட் யூனியனில் பதிவு செய்யப்படவுள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் ஆகஸ்ட் 15 அன்று, 15 குழந்தைகள் இணைந்து மாபெரும் உலக சாதனை புரிய இருக்கிறார்கள்.

கடற்பயணம் மேற்கொண்டுள்ள மாணவர்களுடன், அவர்களது பெற்றோர், மருத்துவக்குழுவினர் ஆகியோர் பைபர் படகில் உடன் சென்று அவர்களை உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்கின்றனர். இந்த பயணம் தொடர்பாக மாற்றுத்திறனாளி மாணவன் சித்தார்த் கூறுகையில், “உலக சாதனை புரிவதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை நீச்சல் பயணம் மேற்கொள்கிறோம். நாங்கள் 15 பேர் இந்த நீச்சல் பயணத்தில் பங்கெடுத்துள்ளோம்” என்று கூறினார்.

மாற்றுத்திறனாளி மாணவன் விஷால் மாதேவ் கூறுகையில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை 604 கி.மீ தொடர் நீச்சல் பயணம் மேற்கொள்கிறோம். இதற்கு முன்னர் கோவளம், மெரினா, கோவா ஆகிய பகுதிகளில் நீச்சல் பயணம் மேற்கொண்டோம். நாங்கள் எல்லாரும் சென்னையை சேர்ந்தவர்கள். நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் பயிற்சி மேற்கொண்டோம். கடல் நீச்சல் எங்களது திறமையை வெளிப்படுத்தும்” என்று விஷால் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான கபடி போட்டி: திருவனந்தபுரம் அணியை வீழ்த்தி மதுரை அணி அபார வெற்றி! - Southern Railway Kabaddi Tournament

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.