ETV Bharat / state

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு உயரும்? - Disabled Students Scholarship hike

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் 50 மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 1:38 PM IST

சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஊனமுற்றவர் என்ற சொல்லை நீக்கி மாற்றுத் திறனாளிகள் என பெயரிட்டு, அவர்களது நலன்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் கீழ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று தனியே ஒரு துறையை புதிதாக ஏற்படுத்தினார்.

இதனையடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500ஆகவும் உயர்த்தி வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிலையில், தற்போது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையையும் உயர்த்தி மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதன்படி, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 2,000 ரூபாய் என உத்தரவிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ–மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 6,000 ரூபாய் என்றும், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ–மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 4,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 8,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கிட ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடி சான்சிபார் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு!

அதேபோல, கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாய் என்பதை 12 ஆயிரம் ரூபாய் என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ–மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 7 ஆயிரம் ரூபாய் என்பதை 14 ஆயிரம் ரூபாயாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அனுமதித்து கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மேலும், ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியருக்கு ஊக்கமளிப்பதற்காக, அவர்களுக்கு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 50 மாற்றுதிறனாளிகள் பயன்பெறும் வகையில் 50 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.