தருமபுரி: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குப்பெட்டிகள், தருமபுரி செட்டி கரையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறக்கி வைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரெஜோரியா ஆகியோர் முன்னிலையில் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன.
6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, திமுக வேட்பாளர் ஆ.மணி, அதிமுக வேட்பாளர் அசோகன் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், 6 சட்டமன்றத் தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் இருந்தனர்.
மேற்கண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையைச் சுற்றி, சி.ஆர்.பி.எப் 24 நபர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் பிரிவு 24 நபர்கள், ஆயுதப்படை காவலர்கள் 24 நபர்கள், உள்ளூர் காவலர்கள் 150 பேர் என மொத்தம் 222 பேர் ஒரு நாளைக்கு 3 ஷிப்ட் சுழற்சி முறையில் நான்கு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு வாக்குப்பதிவு நிலவரத்தில் முரண்பாடு.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய தகவல்! - Lok Sabha Election 2024