சென்னை : சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தொகுப்பான 'சாம்பியன்ஸ் கிட்' (Champions Kit) பொருட்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
முதற்கட்டமாக 553 மாணவ-மாணவிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சாம்பியன்ஸ் கிட்களை வழங்கினார். இத்தொகுப்பில் பை, நவீன தண்ணீர் பாட்டில், தசைப்பிடிப்பிற்கு ஒத்தடம் குடுக்கும் பை, தொப்பி, கர்சீப் டவல், வேர்வை உறிஞ்சும் துண்டு, கைக்கடிகாரம் மற்றும் டீ கப் அடங்கிய தொகுப்பாகும்.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைய வளாகம் கட்டும் பணிக்கும், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா காணொளி காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க : 2026-ல் பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் தயாரா? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார் இது தொடர்பான கேள்விக்கு, என்னை அழைத்தால் நான் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுடைய வழிகாட்டலில், நம்முடைய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (SDAT) விடுதிகள் அனைத்து வசதிகளுடன் திறம்பட செயல்பட்டு வருகின்றன.
— Udhay (@Udhaystalin) November 11, 2024
குறிப்பாக, அங்கு தங்கி பயிலும் மாணவர்கள் சர்வதேச - தேசிய அளவிலானப் போட்டிகளில் தொடர்ந்து சாதனைகளை படைத்து… pic.twitter.com/OwbO9rHU1S
மேலும் திமுக ஆட்சியில் தொடங்கப்படும் திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்கப்படுவதாக விமர்சனம் எழுதுகிறதே என்ற கேள்விக்கு, யார் பெயரை வைக்க வேண்டும்? விமர்சனம் வரத்தான் செய்யும் யார் பெயரை வைக்க வேண்டுமா அதைத்தான் வைக்கிறோம்.
சென்னை அருகே விளையாட்டு நகரம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் சில பிரச்சனையின் காரணமாக தாமதம் ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்