சென்னை: டெல்லியில் இருந்து இன்று காலை 7.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.45 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், அதேபோல் காலை 11.25 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.20 மணிக்கு டெல்லிக்கு சென்றடைய வேண்டிய விஸ்வரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விமான என்ஜினில் வெளிவந்த புகை.. எரிபொருள் அதிகமாக நிரப்பியது காரணமா? - எமிரேட்ஸ் நிறுவனம் விளக்கம்
மேலும் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வேறு விமானங்களுக்கு டிக்கெட்டுகள் மாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'போதிய பயணிகள் இல்லாததால் நிர்வாக காரணங்களுக்காக இந்த 2 விமான சேவைகளும், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதுமான பயணிகள் இல்லாததால் இவ்வாறு விமானங்கள் ரத்து செய்யப்படுவது ஒன்றும் முதல்முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்