திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டை கூட்டு சாலைப் பகுதியில் ஊருக்குள் உணவு தேடி வந்த குரங்கு ஒன்று, அங்கிருந்து மரத்தில் தாவும் போது, மரத்தின் அருகில் சென்ற மின்கம்பி எதிர்பாராத விதமாக உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர், உயிரிழந்த குரங்கினை மீட்டு, மனிதர்களுக்குச் செய்யும் சடங்குகள் போன்று செய்து, அங்குள்ள அனுமன் கோயில் பின்புறம் நல்லடக்கம் செய்துள்ளனர். மேலும், வாணியம்பாடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்று இறந்த குரங்குகளை மீட்டு, அனுமன் கோயில் பின்புறம் நல்லடக்கம் செய்து வந்ததாகவும், தற்போது இறந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது 75வது குரங்கு என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கண்கலங்க வைக்கும் தருணம்.. நடுரோட்டில் உயிரிழந்து கிடந்த குட்டி யானைக் கண்ட தாய் யானையின் பாசப் போராட்டம்! - DEATH OF BABY ELEPHANT